Close
டிசம்பர் 12, 2024 4:37 மணி

ஒளவையார் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அறிவிப்பு

மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்

உலக மகளிர் தின விழா 8.3.25 அன்று கொண்டாடப்படும் போது பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு  ஒளவையார் விருது தமிழக முதல்வரால் வழங்கப்பட உள்ளது.

அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்கண்ட தகுதியுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
விதிமுறைகள்

  • தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும் 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
  • குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கைகள் சமூக சீர்திருத்தம் மகளிர் மேம்பாடு, மத நல்லிணக்கம், மொழி தொண்டு, கலை அறிவியல், பண்பாடு, கலாச்சாரம், பத்திரிகை நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிக சிறந்து விளங்கும் மகளிராக இருத்தல் வேண்டும்..
  • பெண்களுக்கான இச்சமுக சேவையை தவிர்த்து வேறு சமூக சேவைகள்  ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
  • https://awards.tn.gov.in/ இணையதளத்தில் பதிவு செய்த பிறகு அனைத்து ஆவணங்களையும் சம்பந்தப்பட்ட மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு கையேடாக தயார் செய்து தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அச்சு செய்யப்பட்டு தலா இரண்டு நகல்கள் அனுப்பிட வேண்டும்.

கையேட்டில் இணைக்கப்பட வேண்டியவை

  • பொருளடக்கம் மற்றும் பக்க எண், இவ்விருது பெறுவதற்கு நியமிக்கப்பட்டவரின் சுயவிவரம், சுய சரிதை, பாஸ்போர்ட் படம் இரண்டு, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட சமூக நல அலுவலர் ஆகியோரின் பரிந்துரை கடிதம், ஒரு பக்கம் விபரம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்,
  • தேசிய மற்றும் உலகளாவிய விருதுகளின் விபரம், விருது பெற்று இருப்பின் விருதின் பெயர், யாரிடமிருந்து பெறப்பட்டது, பெற்ற வருடம், பெற்றதற்கான காரணம், விருது பெற்ற புகைப்படம், சான்றுகள் இணைக்கப்பட வேண்டும் .
  • சேவை பற்றிய விளக்கம் புகைப்படத்துடன் சேவை பாராட்டி பத்திரிகை செய்தி தொகுப்பு, சமூக சேவையாளரின் சமூக சேவை நிறுவனத்தின், சேவை மூலமாக பயனாடிகள் பயனடைந்த விபரம், தொண்டு நிறுவனத்தின் பதிவு உரிமம், ஆண்டறிக்கை, சமூக பணியாளர் இருப்பிடத்தின் அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள் ஏதும் இல்லை என்பதற்கான சான்று இணைப்பு படிவம் தமிழ் மற்றும் ஆங்கிலம் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

இவைகள் அனைத்தும் அச்சு செய்யப்பட்டு தலா இரண்டு நகல்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அனுப்பப்பட வேண்டும்.

விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் இந்த மாதம் 31ஆம் தேதி ஆகும்.
மேலே குறிப்பிட்டுள்ள விதிமுறைகளின் படி உரிய முறையில் பெறப்படாமல் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
இவ்விருதுக்கு ரொக்க பரிசு, தங்கப் பதக்கம், சான்று மற்றும் சால்வை ஆகியவை வழங்கப்படும்.
மேலும் விவரங்களை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகம் இரண்டாவது தளத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top