Close
ஏப்ரல் 5, 2025 4:37 காலை

உசிலம்பட்டியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

தமிழகம் முழுவதும் அதிமுக வின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் 8- ம்ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சிதலைவி அம்மா அவர்களின் 8- ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, உசிலம்பட்டி அதிமுக நகர செயலாளர் பூமா ராஜா தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ. க்கள் ஐ.மகேந்திரன், தவசி மற்றும் அதிமுக நிர்வாகிகள பலர் கலந்து கொண்டு அம்மாவின் திருவுருவப்படைத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினர்.


இதே போன்று, உசிலம்பட்டி தேவர் சிலை அருகில் வத்தலக்குண்டு சாலையில் அதிமுக ஒபிஎஸ் அணி சார்பில் உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன் தலைமையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், பேசிய எம்எல்ஏ அய்யப்பன் கூறுகையில், ஓபிஎஸ் அவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி அந்த இரட்டை இலை சின்னத்தை அபகரிக்க நினைத்த இந்த நேரத்தில் உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஓபிஎஸ் ஆலோசனையின் பெயரில் தான் இரட்டை இலை சின்னம் இருக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது

அதன் அடிப்படையில் என்னதான் பொய்யான தகவல்களை சொன்னாலும் தர்மம் என்றும் வெல்லும். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மமே வெல்லும் என்ற அடிப்படையில் இன்று நமக்கு சாதகமான தீர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. மீண்டும் ஓபிஎஸ் தலைமையில் இரட்டை இலை சின்னத்தைப் பெற்று அம்மாவின் நினைவு நாளில் ஓபிஎஸ் தலைமையில் வருகின்ற 2026-ல் முதலமைச்சர் ஆக்குவோம் அனைவரும் பாடுபட வேண்டும் என்று கூறினார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top