Close
டிசம்பர் 12, 2024 1:35 மணி

வங்க தேசத்தில் இந்துக்கள் படுகொலை கண்டித்து தென்காசியில் ஆர்ப்பாட்டம்

வங்க தேசத்தில் இந்துககள் தாக்கப்படுவதை கண்டித்து தென்காசியில் நடந்த ஆர்ப்பாட்டம்.

வங்கதேச இந்துக்கள் படுகொலையை கண்டித்து தென்காசியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

வங்கதேசத்தில் இந்துக்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து வங்கதேச இந்து உரிமை மீட்பு குழு சார்பில் தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் தலைமையில் பாஜக மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா தொகுதி பார்வையாளர் மகாராஜா முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக, இந்து முன்னணி ,விசுவ இந்து பரிசத் தொண்டர்கள் மற்றும் சாதுக்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வங்கதேசத்தில் இந்துக்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்தும் கோவில்கள் இடிக்கப்படுவதை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு தென்காசி டிஎஸ்பி தமிழ் இனியன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கப்படாததனால் ஆர்ப்பாட்டம் நடத்திய 200-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top