Close
டிசம்பர் 12, 2024 6:36 காலை

உலக மண் தினத்தையொட்டி திருச்சி பொன்மலையில் நடப்பட்ட பனை விதைகள்

உலக மண் தினத்தையொட்டி திருச்சி பொன்மலையில் பனை விதைகள் நடப்பட்டன.

தண்ணீர் அமைப்பு சார்பில் உலக மண் தினத்தை முன்னிட்டு இன்று 05.12.24 மாலை 5.30 மணிக்கு பொன்மலை பகுதியில் பனை விதைக்கப்பட்டது.

மண் நம் வாழ்வின் ஒருங்கிணைந்த பகுதிகளில் ஒன்றாகும். அவை நமக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. உணவுப் பொருட்களின் வளர்ச்சிக்கான முக்கியக் காரணியாக உள்ளது. மேலும் பல்வேறு உயிரினங்களின் தாயகமாகவும் உள்ளன. மண்ணின் தரத்தை பராமரிப்பதும், மண்ணின் தரத்தை உறுதி செய்வதும் ஒவ்வொருவரின் பொறுப்பாகும்.

தொழில்மயமாக்கல் மற்றும் மோசமான நில மேலாண்மை அமைப்புகள் பல இடங்களில் மண்ணின் தரத்தை குறைத்து, மண் அரிப்பு, வளம் குறைதல் மற்றும் பொருள் இழப்புக்கு காரணமாகிறது. மண்ணின் தரத்தை பராமரிப்பதன் முக்கியத்துவம் மற்றும் அது நம் வாழ்க்கை மற்றும் உணவு முறையில் எவ்வளவு முக்கியமானது என்பதை ஒவ்வொரு மக்களுக்கும் அறிவிப்பதை உறுதி செய்வதற்காக ஆண்டும் உலக மண் தினம் கொண்டாடப்படுகிறது. மண் தினத்தை கொண்டாடும் விதமாக மாணவர்கள், மற்றும் நண்பர்கள் 200க்கும் மேற்பட்ட விதைகள் பொன்மலை மைதானம் மற்றும் பொன்மலைப்பட்டி பகுதியில் விதைக்கப்பட்டது.

இதில் மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளரும்,தண்ணீர் அமைப்பு செயல் தலைவருமான கே.சி.நீலமேகம், தண்ணீர் அமைப்பு செயலாளர் பேராசிரியர் கி.சதீஸ்குமார், மக்கள் சக்தி இயக்க நிர்வாகி குமரன், ஜீவானந்தம், ஸ்ரீ, தமிழ்மாறன், வெங்கடேஷ். விக்னேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top