திருவண்ணாமலை எஸ் கே பி கல்லூரி வளாகத்தில் எஸ்கேபி கல்வி குழும தலைவர் கருணாநிதி கார்த்திகை தீப திருவிழா பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள திருவண்ணாமலை மாவட்ட பிரின்ஸ் ஆப் பீப்பிள் மக்கள் நண்பர்கள் குழுவினர்களுக்கு அதன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகமிடம் 300 சீருடைகளை வழங்கினார்.
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 1ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. தீபத் திருவிழாவில் சுவாமி தரிசனம் செய்வதற்கும், கிரிவலம் வருவதற்கும் சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
25 ஆண்டுகளாக சேவை பணியில் எப்ஓபி
திருவண்ணாமலை மாவட்ட எஃப் ஓ பி கடந்த 25 ஆண்டுகளாக திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வனத்துறை, மாவட்ட காவல்துறையுடன் இணைந்து தீபத் திருவிழாவில் போக்குவரத்து பணி, காவல் பணி, இரவு காவல் பணி, இரவு பனி மலை சுற்றும் பாதையில் பாதுகாப்பு பணி, மலை மீது தீ தடுப்பு பணி, காவல் உதவி மையப்பணி, தற்காலிக பேருந்து நிலையங்களில் பக்தர்களுக்கு உதவி செய்தல், அவர்களுக்கு வழிகாட்டுதல், சுவாமி திருவீதி உலாவில் பாதுகாப்பு பணி என பல்வேறு பணிகளில் தீபத்திருவிழாவின் போது இளைஞர்கள் சமூக ஆர்வலர்கள் தன்னார்வலர்கள் என அனைவரையும் ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்.
அவ்வாறு இந்த தீபத் திருவிழாவில் பணியாற்ற உள்ள மாவட்ட மக்கள் நண்பர்கள் குழுவுக்கு எஸ்கேபி கல்வி குழுமத் தலைவர் கருணாநிதி சீருடைகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் வெங்கடேசன், கவிஞர் முருகையன், காதர் ஷா, அன்பரசு, சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.