Close
டிசம்பர் 12, 2024 8:50 காலை

மதுக்கூர் வட்டாரத்தில் உலக மண்வள தின கொண்டாட்டம்..! மண்வள அளவீடு செயல் விளக்கம்..!

மண்வளம் அளவீடு செய்வது குறித்த விளக்கம் செய்துகாட்டப்பட்டது.

மதுக்கூர் வட்டாரத்தில், தஞ்சாவூர் வேளாண் துணை இயக்குனர் தலைமையில் மதுர பாசானிபுரம் கிராமத்தில் மண்ணின் வளத்தை அளத்தல், கண்காணித்தல் மற்றும் பராமரித்தல் என்ற முழக்கத்தோடு உலக மண்வள தினம் கொண்டாட்டம்.

உலகம் முழுவதும் இன்றைய தினம் பத்தாவது உலக மண்வள தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. வேளாண் இணை இயக்குனர் தஞ்சாவூர் அவர்களின் அறிவுரைப்படி மதுக்கூர் வட்டாரத்தில் மதுர பாசாணிபுரம் கிராமத்தில் தஞ்சை மாவட்ட வேளாண் துணை இயக்குனர் சுஜாதா அவர்களின் தலைமையில் உலக மண்வள தினம் கொண்டாடப்பட்டது.

இக்கூட்டத்தில் மண் வளத்தின் முக்கியத்துவம் மண்ணில் உள்ள சத்துக்களை எவ்வாறு அளவீடு செய்வது அளவீடுகளின் அடிப்படையில் மண்ணைக் கண்காணித்தல் மற்றும் மண்ணை பராமரித்தல் ஆகிய தலைப்புகளின் கீழ் வேளாண் துணை இயக்குனர் சுஜாதா பேசுகையில்,

மண்ணில் உள்ள தழை மணி சாம்பல் சத்துகள் மற்றும் நுண்ணூட்ட சத்துக்களை அளவீடு செய்வதன் முக்கியத்துவம் அதன் அடிப்படையில் மண்ணின் வளத்தினை எவ்வாறு பயிர் சார்ந்து கண்காணிப்பது மற்றும் மண்ணின் வளத்தினை குறைக்காமல் அதனை எப்படி பராமரிப்பது என்பது குறித்து விவசாயிகளிடம் விளக்கி கூறினார்.

அட்மா திட்ட அலுவலர்கள் சுகிர்தா மற்றும் ராஜு விவசாயிகள் தங்கள் வயல்களில் மண்ணின் வளத்தினை அளவீடு செய்வதற்கு மண் மாதிரி எடுக்கும் முறைகள் மற்றும் பல்வேறு பயிர்களுக்கு எவ்வளவு ஆழத்தில் மண் மாதிரி எடுக்க வேண்டும் போன்றவைகள் குறித்து செயல் விளக்கமாக செய்து காட்டினர்.

வேளாண் உதவி இயக்குனர் திலகவதி மண்வள அட்டையின் பயன்பாடு, அதன் முக்கியத்துவம் பற்றி எடுத்துக் கூறி வேளாண் துணை இயக்குனர் மற்றும் மதுர பாசாணிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மூலம் மண்வள அட்டைகளை வழங்கினார்.

உதவி விதை அலுவலர் இளங்கோ கூட்டத்தினை ஒருங்கிணைத்தார். வேளாண் உதவி இயக்குனர் திலகவதி பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top