Close
டிசம்பர் 12, 2024 3:57 மணி

திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்கு கட்டுப்பாடுகள்? அமைச்சர் சேகர் பாபு முக்கிய பேட்டி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா குறித்த கட்டுப்பாடுகள் குறித்து அமைச்சர் சேகர் பாபு முக்கிய பேட்டி அளித்துள்ளார்.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில், தீபமலையில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து, இன்று மாலை அங்கு நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா, காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த 1ஆம் தேதி துவங்கியது.

தொடர்ந்து பிடாரி அம்மன் உற்சவம், விநாயகர் சண்டிகேஸ்வரர் உற்சவம் நடந்தது.இதனைத் தொடர்ந்து 4ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கிய தீபத்திருவிழா மூன்றாம் நாள் திருவிழாவாக இன்று காலை விநாயகர் மூஷிக வாகனத்திலும் , பூத வாகனத்தில் சந்திரசேகர் மாடவிதி வலம் வந்து அருள் பாலித்தனர். தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீபத்திருவிழா வருகின்ற 13ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்று 40 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்நிலையில் கடந்த டிசம்பர் 1,2 தேதிகளில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த புயல் மழையால் தீப மலையில் பாறைகள் விழுந்து மண் சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர்.

தீப மலையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் மலைப்பகுதிக்கு யாரும் வரவேண்டாம் என்றும் மலைப்பகுதியில் ஆய்வு செய்து வரும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மலை ஏறுவதற்கு 2000 பக்தர்கள் அனுமதி

கடந்த மாதம் மழைக்கு முன்பு நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மலை ஏறுவதற்கு 2000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. மேலும் மலையேறும் பாதையில் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்த பிறகு தான் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் அறிவிப்பு

இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்

தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கார்த்திகை தீப நிகழ்ச்சி 13-ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் மூலவர் சந்நிதியில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் மற்றும் மாலை 6 மணி அளவில் 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.

திருவண்ணாமலையில் எதிர்பாராத, நடக்கக் கூடாத சோகம் ஒன்று நடந்துள்ளது. அதனைக் கருத்தில் கொண்டு, அதிகாரிகள் வழங்கிய அறிக்கையின் அடிப்படையிலும், இன்று மாலை திருவண்ணாமலை மாவட்ட அமைச்சர், அறநிலையத்துறை செயலாளர் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற உள்ளது. அந்தக் கூட்டத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவில் உள்ள சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டு எவையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியுமோ அவற்றை பரிசீலித்து, தீபத் திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு அம்சங்களைக் கருத்தில் கொண்டு இன்று மாலை முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.

முதலமைச்சரின் கவனத்திற்கு சென்று கார்த்திகை தீபத் திருவிழா கட்டுப்பாடுகள் குறித்து அறிவிக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இன்று காலை 3ம் நாள் திருவிழாவில் பூத வாகனத்தில் சந்திரசேகர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top