Close
டிசம்பர் 12, 2024 2:36 மணி

குதிரையை அடித்த ஒலிம்பிக் சாம்பியனுக்கு ஓராண்டு தடை

மூன்று முறை ஒலிம்பிக் சாம்பியனான இங்கிலாந்து வீராங்கனை சார்லட் டுஜார்டினுக்கு தனது குதிரையிடம் தவறாக நடந்து கொண்டதற்காக ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மூக ஊடகங்களில் வைரலான சார்லோட்டின் வீடியோவில், அவர் தனது குதிரையின் கால்களை சாட்டையால் தொடர்ந்து அடிப்பதைக் காண முடிந்தது.

இந்த வீடியோ வெளியான பிறகு, சார்லோட் சமூக ஊடகங்களில் நிறைய விமர்சிக்கப்பட்டார். சார்லோட் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விளையாட்டு ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து  உலக குதிரையேற்ற விளையாட்டு ஆணையம் அவருக்கு ஓராண்டு தடை விதித்தது.  இது தவிர, 39 வயதான சார்லோட்டிற்கு ரூ.9.57 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

உலக குதிரையேற்ற விளையாட்டு ஆணைய பொதுச்செயலாளர் கூறுகையில், இந்த தடை எவ்வளவு பெரிய விளையாட்டு வீரராக இருந்தாலும், குதிரையை தகாத முறையில் நடத்தினால், அவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்ற தெளிவான செய்தியாகும். பயிற்சியின் காட்சிகளில் வேறு எந்த விதியையும் மீறவில்லை என்று கூறினார்

பிரிட்டிஷ் குதிரையேற்றம் மற்றும் பிரிட்டிஷ் டிரஸ்ஸேஜ் உடனடியாக சார்லட்டிற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது. சார்லோட் தேசிய போட்டிகள் அல்லது பயிற்சி நிகழ்வுகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top