Close
டிசம்பர் 12, 2024 10:43 காலை

அண்ணாமலையார் திருவீதியுலாவின் போது போக்குவரத்து தடை: பக்தர்கள் மகிழ்ச்சி

போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள மாடவீதி

தீபத் திருவிழாவில் அண்ணாமலையார் திருவீதியுலாவின் போது மாடவீதியில் போக்குவரத்தை தடை செய்ய பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இது குறித்து நமது “தமிழ் மணி”  செய்தி தளத்தில் டிசம்பர் 5ஆம் தேதி அண்ணாமலையார் திருவீதியுலாவின் போது போக்குவரத்துக்கு தடை செய்ய  கோரிக்கை என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா, காவல் தெய்வ மான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த 1ஆம் தேதி துவங்கியது.

தொடர்ந்து பிடாரி அம்மன் உற்சவம், விநாயகர் சண்டிகேஸ்வரர் உற்சவங்கள் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து 4 ஆம் தேதி அண்ணாமலையார் கோயிலில் மூலவர் சந்நிதி முன்பு உள்ள தங்கக்கொடி மரத்தில் கோவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, மேள தாளங்கள் முழங்க , அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற பக்தர்களின் கோஷத்துடன் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

தீபத் திருவிழா நடைபெறும் 10 நாள்களும் தினமும் காலை, இரவு வேளைகளில் மாட வீதிகளில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா வருவது வழக்கம்.

அதன்படி, தீபத் திருவிழாவின்  4ம்  நாளான இன்று காலை அருணாச்சலேஸ்வரர் நாக  வாகனத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் வளம் வந்தனர்

.

போக்குவரத்து தடை 

நமது தமிழ்மணி செய்தி தளத்தில் பக்தர்களின் கோரிக்கையை செய்தியாக வெளியிட்டு தெரிவித்ததின் பேரில் இன்று சுவாமி திருவீதி உலாவின்போது மாடவீதி முழுவதும் போக்குவரத்து தடை செய்யப்பட்டு பக்தர்கள் எவ்வித சிரமமும் இன்றி சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்திருந்தனர்.

இதனால் பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து காவல்துறையினருக்கும் செய்தி வெளியிட்ட நமது செய்தி தளத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

நாக வாகனத்தில் அருணாச்சலேஸ்வரர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top