Close
ஏப்ரல் 4, 2025 12:14 காலை

மறைந்த திமுக உறுப்பினர்களின் வாரிசுகளுக்கு குடும்ப நல நிதி: எம்.பி. ராஜேஷ்குமார் வழங்கல்

மோகனூர் பகுதியில் மறைந்த திமுக உறுப்பினர்களின் வாரிசுகளுக்கு, குடும்ப நல நிதியை, மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி., வழங்கினார். அருகில் எம்எல்ஏ ராமலிங்கம்.

நாமக்கல் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, மோகனூர் கிழக்கு ஒன்றியம், மோகனூர் டவுன் பஞ்சாயத்தில், கடந்த 2024 மார்ச் மாதத்திற்கு பிறகு மறைந்த 102 திமுக உறுப்பினர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி மோகனூரில் நடைபெற்றது.

நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம், மோகனூர் ஒன்றிய திமுக செயலாளர் நவலடி, மோகனூர் டவுன் பஞ்சாயத்து செயலாளர் செல்லவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, மறைந்த திமுக உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும், இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு மாவட்ட திமுக சார்பில், கலைஞர் குடும்ப நல நிதியாக தலா ரூ. 10,000 வீதம் மொத்தம் ரூ.10,20,000 உதவித்தொகையை அவர் வழங்கினார்.

மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ஆனந்தகுமார், மோகனூர் டவுன் பஞ்சாயத்து தலைவர் வனிதா மோகன், துணை தலைவர் சரவணன், உடையவர், பூவராகவன், குமரவேல், இளம்பரிதி, சித்தார்த், கிருபாகரன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top