Close
டிசம்பர் 12, 2024 9:44 காலை

நீங்கள் இதய நோயாளியா? முதலில் இந்த 5 ரூல்சை படியுங்கள்…

நமது உடலில் மூளை கண்ட்ரோல் ரூம் என்றால் அந்த கண்ட்ரோல் இடும் கட்டளைப்படி அனைத்து உறுப்புகளையும் இயக்குவதற்கான சிஸ்டம் தான் இதயம். இதயம் செயல்பாடு குறைந்தால் நமக்கு இதய நோயாளி என்ற பெயர் வந்து விடுகிறது. எனவே இதயத்தை பாதுகாக்கவேண்டியது நமது முக்கிய கடமைகளில் ஒன்று.

இதயத்தை எப்படி பாதுகாப்பது, இதய நோய் வந்து விட்டால் இறப்பை தடுக்க அன்றாட வாழ்வில் நாம் என்னென்ன செய்யவேண்டும் என்பது பற்றி திருச்சியை சேர்ந்த பிரபல இதய நோய் நிபுணர் டாக்டர் செந்தில்  குமார் நல்லுசாமி ‘இதயம் பேசுகிறது’ என்ற தலைப்பில் யூடியுப்பில் பொதுமக்கள் நலன் கருதி  அவ்வப்போது இலவச மருத்துவ ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.

இன்று அவர் வழங்கி உள்ள ஆலேசானை என்ன என்பதை இனி பார்ப்போமா?

இதயம் செயலிழப்பு என்பது இதயத்திற்கு செல்லக்கூடிய மசில்ஸ் சேதம் அடைவதால் இதயத்தின் பம்பிங் திறன் குறைவதால் ஏற்படுகிறது.

இதனை தடுக்க இதயநோயாளிகள் ஒன் டூ பைவ் ரூல்சை கடைபிடித்தால் மாரடைப்பு ஏற்படாமல் தடுத்து பாதுகாப்பான இதயத்தோடு வாழலாம்.‘

ரூல் நம்பர் ஒன்- நமது உடலில் ஒரு நாளுக்கு 1 லி்ட்டர் லிக்யூட் டயட் தான் இருக்கவேண்டும். இது அதிகரிக்கும்போது அது லங்சில்  ப்ளூயிட் அக்கும்லேட் ஆகி இதய செயலலிழப்பை ஏற்படுத்தி விடுகிறது. எனவே இதனை கவனமாக பார்த்துக்கொள்ளவேண்டும்.

ரூல் நம்பர் டூ – நமது உடலில் தினமும் 2 கிராம் அளவில் தான் சால்ட் ரெட்ஸ்டின்ஸ் இருக்கவேண்டும்.

ரூல்நம்பர் த்ரீ- ,இதய நோயாளிகள் படுக்கும்போது மூன்று தலையணைகள் வைத்து உயரமாக தலைவைத்து படுக்கவேண்டும்.

ரூல் நம்பர் க்போர்- இதய நோயாளிகள் மருத்துவர் வழங்கும் மருந்துகளை முறையாக சரியான நேரத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும்.

ரூல் நம்பர் வைவ்- நமது ரத்தத்தில் பொட்டாசியம் லெவல் 5 என்கிற அளவிற்குள் தான் இருக்கவேண்டும். இது அதிகரித்தால் உடனடியாக இதய நோய் நிபுணரை அணுகி உரிய ஆலோசனை பெற வேண்டும்.

இந்த ஒன் டூ பைவ்  ரூல்சை கடைபிடித்தால் பாதுகாப்பாக வாழலாம் என்கிறார் டாக்டர் செந்தில் குமார் நல்லுசாமி.

மருத்துவ உலகம் இன்று வணிகமயமாகி விட்டது என்று பலராலும் குற்றம் சாட்டப்படும் இந்த கால கட்டத்தில் இலவசமாக மருத்துவ ஆலோசனைகளை வழங்க டாக்டர் செந்தில்குமார் நல்லுசாமி போன்ற மருத்துவர்களும் இருக்க தான் செய்கிறார்கள் என்பது பாராட்டுக்குரியது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top