Close
டிசம்பர் 12, 2024 7:49 காலை

மலை அடிவாரத்தை சீரமைக்க களமிறங்கிய அமைச்சர் வேலு

தூய்மை பணியில் அமைச்சர் வேலு

திருவண்ணாமலையில் மண் சரிந்த அண்ணாமலையார் மலை அடிவாரத்தை சீரமைக்க ஆயிரம் தன்னார்வலர்களுடன் அமைச்சர் வேலு களமிறங்கினார்.

கடந்த ஒன்றாம் தேதி மற்றும் இரண்டாம் தேதிகளில் பெய்த கன மழையினால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த கனமழை பெய்தது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை, ஆரணி, செங்கம், செய்யாறு, கலசப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து இரண்டு தினங்களாக தொடர் மழை பெய்தது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் மலை அடிவாரத்தில் குடியிருந்த இரண்டு வீடுகள் மண் சரிவினால் சேதமடைந்து ஏழு பேர் உயிரிழந்தனர்.
தற்போது அப்பகுதிகளில் இயல்பு வாழ்க்கை மெதுவாக தொடங்கியுள்ளது.

இந்நிலையில் மழையின் காரணமாக மலையிலிருந்து அதிகளவு மண் சரிவு ஏற்பட்டதால் பேகோபுர தெரு, வஉசி நகர் உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் கால்வாய்கள் அடைப்பு காரணமாக சேரும் சகதியுமாக காட்சியளித்தது.

அதனை தூய்மை அருணை சார்பில் அதன் அமைப்பாளரும் பொதுப்பணித்துறை அமைச்சருமான வேலு தூய்மை காவலர்கள் ஆயிரம் பேருடன் சென்று பாதிப்படைந்த பகுதிகளில் தூய்மை பணியை மேற்கொண்டார்.

மேலும் மண் சரிவு இடங்களில் நேரில் சென்று ஆய்வு செய்து மலைப்பகுதிகளில் குடியிருக்கும் குடியிருப்புகளை உடனே வேறு இடத்திற்கு மாற்றம் செய்து நிரந்தர தீர்வு ஏற்படுத்தவும் ஆலோசனைகளை மேற்கொண்டார்.

மேலும் அந்தப் பகுதிகளில் மின்சாரம் இல்லாமல் தடைப்பட்டு இருப்பதையும் மின் கம்பம் சாய்ந்து இருப்பதையும் ஆய்வு செய்து அமைச்சர் உடனடியாக மின்சாரம் வழங்குவதற்கு மின்வாரிய அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார்.

அந்தப் பகுதியில் சரிந்த மண்களை அப்புறப்படுத்த உடனடியாக இயல்பு நிலைக்கு கொண்டு வர நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்.

இந்த ஆய்வின்போது திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை,முன்னாள் நகர மன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜய ரங்கன், தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், மாநகராட்சி ஆணையர் மற்றும் ஊழியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாமன்ற உறுப்பினர்கள் தன்னார்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top