Close
டிசம்பர் 12, 2024 11:55 காலை

செஞ்சிலுவை சங்கத்தில் இணைந்து சேவையாற்றுங்கள் ஆட்சியர் வேண்டுகோள்..!

செஞ்சிலுவை சங்க நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்த ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தினர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சிக்கு அருணை மருத்துவக் கல்லூரி நிர்வாக இயக்குனர் எ.வ.வே.கம்பன் முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில் ஆட்சியர் பேசுகையில்;

சர்வதேச செஞ்சிலுவை சங்கம் முதன் முறையாக ஜெனிவாவில் தொடங்கப்பட்டது. அதன் தொடர்ந்து இந்தியாவில் செஞ்சிலுவை சங்கம் தொடங்கப்பட்டது. இதன் நோக்கம் மனிதாபிமான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதாகும்.

ஜூன் ஹென்றி டொனால்ட் என்பவர் 1859 ஆம் ஆண்டு போரின்போது இத்தாலியில் போர்க்களத்தில் காயம் அடைந்த வீரர்களின் நிலையைக் கண்டு திகைத்தார். அவர் உடனடியாக உள்ளூர் மக்களின் உதவியுடன் நிவாரண சேவைகளுக்கு ஏற்பாடு செய்தார். போரின் போது காயம் அடைந்த வீரர்களுக்கு உதவ ஒரு நடுநிலை அமைப்பை உருவாக்க வேண்டும் என்று பரிந்துரைத்து புத்தகத்தை எழுதினார்.

அந்த புத்தகம் வெளிவந்து ஓராண்டுக்கு பிறகு ஹென்றி ஆலோசனைகளை கருத்தில் கொண்டு ஜெனிவாவில் ஒரு சர்வதேச மாநாடு மனித நேயத்தை அடிப்படையாகக் கொண்டு செஞ்சிலுவை சங்கம் தொடங்கப்பட்டது.

இந்த சங்கமானது மனித நேயத்தை அடிப்படையாகக் கொண்டு போர்காலங்களிலும் அதன் பிறகு நாளடைவில் அனைவருக்கும் உதவி புரிய வேண்டும் என்ற அடிப்படையில் இந்த அமைப்பு மாறியது. இந்த சங்கம் 4 முறை நோபல் பரிசு பெற்றுள்ளது.

இந்திய அளவில் குடியரசுத் தலைவர் ,மாநில அளவில் மேதகு ஆளுநர் ,மாவட்ட அளவில் அந்த மாவட்டங்களை சேர்ந்த ஆட்சியர் ஆகியோர் தலைவர்களாக கொண்டு இந்த சங்கம் செயல்படுகிறது.

இந்தச் சங்கத்தில் இணைவதன் மூலம் உங்கள் சேவை மனப்பான்மை வளர்ந்து கொள்ள முடியும். கொரோனா நாட்கள் மற்ற நாட்கள் மற்றும் பல்வேறு கட்டங்களில் இச்சங்கம் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு மனிதநேய உதவிகளை மேற்கொண்டுள்ளது.

எனவே மருத்துவம் பயின்று வரும் இளம் தலைமுறைகளான நீங்கள் அனைவரும் இச்சங்கங்களில் தங்களை இணைத்து ஈடுபடுத்திக் கொண்டு மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என ஆட்சியர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ரெட் கிராஸ் சங்க தலைவர் இந்திரராஜன், செஞ்சிலுவை சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் ,மருத்துவர்கள் ,மருத்துவக் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top