Close
டிசம்பர் 12, 2024 6:27 காலை

உலக சாதனை சிலம்பம் போட்டி: குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை

உலக சாதனை சிலம்பம் போட்டியில், சாதனை படைத்த, நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவ மாணவியரை, பள்ளி தாளாளர் தங்கவேல் பாராட்டினார்.

நாமக்கல்:
மேச்சேரியில் நடைபெற்ற உலக சாதனை சிலம்பம் போட்டியில், நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவ மாணவியர் கலந்துகொண்டு சாதனை படைத்தனர்.

சேலம் மாவட்டம், மேச்சேரியில், மேச்சேரி சிலம்பம் கலைக்கூடம் மற்றும் அகாடமி ஆஃப் இந்தியன் மார்ஷியல் ஆர்ட்ஸ் இணைந்த நடத்திய உலக சாதனை சிலம்பம் போட்டிகள் நடைபெற்றது. ஒரே இடத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மணவிகள், ஒரே நேரத்தில் சிலம்பம் சுற்றி, 15க்கும் மேற்பட்ட உலக சாதனை படைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த சிலம்பம் போட்டியில், நாமக்கல் குறிஞ்சி மேல்நிலப்பள்ளியில், 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் 10 மாணவ மாணவிகள் கலந்துகொண்டு, பொதுப்பிரிவு சிலம்பம் போட்டியில் சாதனை படைத்தனர். அவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

சிலம்பம் போட்டியில் சாதனை படைத்த குறிஞ்சி பள்ளி மாணவ மாணவியருக்கு, பள்ளி தாளாளர் தங்கவேல், இயக்குனர்கள், தலைமை ஆசிரியர், முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top