Close
டிசம்பர் 12, 2024 4:53 காலை

நாமக்கல்லில் வணிகர் விரோத சட்டங்களை திரும்பப்பெறக்கோரி ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில் நடைபெற்ற வணிகர் சங்க பேரமைப்பின் கண்டன ஆர்ப்பாட்டத்தில், திரளான வணிகர்கள் கலந்துகொண்டனர்.

நாமக்கல்லில் மத்திய, மாநில அரசுகளின் வணிகர்கள் விரோத சட்டங்களை திரும்பப்பெறக்கோரி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளான வணிகர்கள் கலந்துகொண்டனர்.

மத்திய அரசின் வாடகையின் மீது விதித்துள்ள, 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பை திரும்ப பெற்றிட வேண்டும். மாநில அரசு ஆண்டுதோறும் 6 சதவீதம் கூடுதல் சொத்து வரி விதிப்பை திரும்பபெற வேண்டும். வணிக லைசென்ஸ் கட்டண உயர்வு மற்றும் தொழில் வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்.

அந்நிய நாட்டு ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும். டிராய் விதிமுறைகளை மீறி சாலை ஓரங்களில் குடைகள் அமைத்து செல்போன் சிம் கார்டு விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரவையின், நாமக்கல் மாவட்டக்கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் பார்க் ரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பேரமைப்பின் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர்கள் செல்வராஜ், சுப்பிரமணியம், சங்கர் மற்றும் மாநில இணை செயலாளர் பத்ரி நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட செயலாளர் பொன் வீரக்குமார் வரவேற்று பேசினார். பேரமைப்பின் மாநில மூத்த துணை தலைவர் பெரியசாமி கண்டன ஆர்பாட்டம் குறித்து விளக்கி பேசினார்.

மாவட்டம் முழுவதும் 46 இணைப்பு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிகர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top