Close
டிசம்பர் 12, 2024 2:43 காலை

நாமக்கல்லில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்..!

மத்திய அரசைக் கண்டித்து, நாமக்கல்லில், மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் :

மனிப்பூர் மாநிலத்தில் கலவரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில், நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடந்த 2023 மே மாதம் முதல் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் நடக்கும் இனக்கலவரங்களை முடிவுக்கு கொண்டுவராத மத்திய அரசைக் கண்டித்து, நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், நாமக்கல் பார்க் ரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் சித்திக் தலைமை வகித்தார்.

நாமக்கல் மாநகர காங்கிரஸ் தலைவர் மோகன், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வீரப்பன், ராசிபுரம் நகர காங்கிரஸ் தலைவர் முரளி, வட்டார காங்கிரஸ் தலைவர்கள் எருமப்பட்டி தங்கராஜ், புதுச்சத்திரம் இளங்கோ, நாமகிரிபேட்டை இளங்கோ,ஷேக் உசேன், டாக்டர் பாலாஜி, கொல்லிமலை குப்புசாமி,ராசிபுரம் கணேசன், சாந்திமணி உள்ளிட்ட திரளான காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு, மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top