Close
டிசம்பர் 12, 2024 8:49 காலை

திருத்தேரை ஒட்டிய பிரம்ம தேவனுக்கு நன்றி தெரிவித்த அண்ணாமலையார்

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் 7 நாள் விழாவில் தேரோட்டியாக இருந்து தேரினை ஓட்டிய பிரம்ம தேவனுக்கு நன்றி செலுத்தும் விழா திருவண்ணாமலையில் நடைபெற்றது.

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நான்காம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் 8ம் நாளான நேற்று புதன்கிழமை உற்சவ மூர்த்திகள் அண்ணாமலையாரின் சொரூபமாக விளங்கும் சந்திரசேகர் மற்றும் விநாயகருக்கு திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்துடன் கோவில் 16 கால் மண்டபத்தில் சிகப்பு குதிரை வாகனத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகர் எழுந்தருளியினர்.

அதனைத் தொடர்ந்து சந்திரசேகர் மற்றும் விநாயகர் மகாரதம் என்று அழைக்கப்படும் அண்ணாமலையார் திருத்தேரின் முன்பு எழுந்து அருளினர்.

தீபத் திருவிழாவின் 7ம் நாளான மகா தேரோட்டம் நடைபெற்றது. அப்போது அண்ணாமலையாரின் தேரினை தேரோட்டியாக இருந்து தேரினை இயக்கி நிலைக்கு கொண்டு வந்த பிரம்ம தேவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக திருத்தேருக்கு யாகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்று, அண்ணாமலையாரின் சொரூபமாக விளங்கும் சந்திரசேகர் பிரம்ம தேவனுக்கு நன்றி தெரிவித்தார்.

இந்த நிகழ்வின்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அண்ணாமலையாருக்கு அரோகரா என்று முழக்கங்கள் எழுப்பினர் தொடர்ந்து குதிரை வாகனத்தில் சந்திரசேகர் மற்றும் விநாயகர் மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

குதிரை வாகனத்தில் சந்திரசேகர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top