Close
டிசம்பர் 12, 2024 9:37 காலை

சேந்தமங்கலம் பகுதியில் முடிவுற்ற ரோடு பணிகள்: கண்காணிப்புப் பொறியாளர் ஆய்வு

சேந்தமங்கலம் பகுதியில் முடிவுற்ற ரோடு பணிகளை, சேலம் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் சசிகுமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல்:
சேந்தமங்கலம் பகுதியில் முடிவுற்ற நெடுஞ்சாலைப்பணிகளை கண்காணிப்பு பொறியாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல் நெடுஞ்சாலை கோட்டத்திற்கு உட்பட்ட, சேந்தமங்கலம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்தில், 2024-25-ம் ஆண்டு சிறப்பு பழுது பார்த்தல் திட்டத்தின் கீழ், ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வடுகப்பட்டி – அலங்காநத்தம் ரோட்டில் சுமார் 1 கி.மீ. தூரம் முடிவுற்ற நெடுஞ்சாலைப்பணியினை, சேலம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு கண்காணிப்பு பொறியாளர் சசிகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது புதிதாக போடப்பட்ட ரோட்டின் கணம், மேல் தள சாய்வு மற்றும் சரிவு விகிதங்கள் ஆகியவற்றை அளவீடு செய்து ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், சாலை பராமரிப்பு குறித்து நெடுஞ்சாலை அதிகாரிகளுக்கு உரிய அறிவுரை வழங்கினார். பழையபாளையம், சிவநாயக்கன்பட்டி ஏரிக்கரையில் நெடுஞ்சாலைத்துறை மூலம் நடப்பட்டுள்ள மரக்கன்றுகைள பார்வையிட்டு அதை நன்கு பராமரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியில் நாமக்கல் கோட்டப் பொறியாளர் திருகுணா, சேந்தமங்கலம் உதவிக் கோட்டப் பொறியாளர் சுரேஷ்குமார் மற்றும் உதவிப் பொறியாளர் பிரேனஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top