Close
டிசம்பர் 12, 2024 9:33 காலை

திருவள்ளுவர் சிலை நிறுவி 25 ஆண்டுகள் நிறைவு விழா: நாமக்கல்லில் போட்டிகள்

கன்னியாகுமரியில், திருவள்ளுவரின் 133 அடி உயர சிலை நிறுவி 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு நமக்கல்லில் திருவள்ளுவர் விழா போட்டிகள் நடைபெறுகிறது.

இதுகுறித்து கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

திருவள்ளுவரின் 133 அடி உயர சிலை கடந்த 2000ம் ஆண்டு கன்னியாகுமரியில் நிறுவப்பட்டது. தற்போது 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதையொட்டி நாமக்கல் மாவட்ட மைய நூலகத்தில் டிச.23ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை திருவள்ளுவர் விழா நடைபெற உள்ளது. விழாவில் போட்டோ கண்காட்சி நடைபெறும்.

மேலும், திருக்குறளின் பெருமைகளை உணர்த்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.
மேலும், டிச.23ம் தேதி முதல் டிச.31ம் தேதி வரை, நாமக்கல் மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் சார்பில், மாணவர்கள் மற்றும் நூலக வாசகர்களைக் கொண்டு திருக்குறள் கருத்தரங்கம், வினாடி-வினா போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகள் நடத்தப்படுகிறது.

இதில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ. 5,000, 2ம் பரிசாக ரூ.3,000 மற்றும் 3ம் பரிசாக ரூ. 2,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட உள்ளது. போட்டிகளில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும்.

போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், நாமக்கல் மாவட்ட மைய நூலகத்தை டிச.18ம் தேதிக்குள் அணுகி பெயர் பதிவு செய்து கொண்டு போட்டிகளில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top