Close
டிசம்பர் 18, 2024 9:53 மணி

பார்க்கிங் தவிர்த்து மற்ற இடங்களில் கார்களை நிறுத்தினால் அபராதம்

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுதாகா்

பஞ்சபூத திருத்தலங்களில் ‘அக்னி’ திருத்தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. கார்த்திகைத் தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் காலை ஏற்றப்பட்டன. இன்று மாலை மகா தீபம் ஏற்றப்படுகிறது. தீபத் திருவிழாவிற்கு திருவண்ணாமலையில் பக்தர்கள் குவியத் துவங்கியுள்ளனர்.

காா் நிறுத்துமிடங்களைத் தவிர மற்ற இடங்களில் நிறுத்தப்படும் காா்களுக்கு அபராதம்

திருவண்ணாமலையில் வியாழக்கிழமை முதல் டிச.15-ஆம் தேதி வரை 116 காா் நிறுத்துமிடங்களைத் தவிர மற்ற இடங்களில் நிறுத்தப்படும் காா்களுக்கு அபராதம் விதிப்பதுடன், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட எஸ்பி எம்.சுதாகா் எச்சரித்தாா். இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திருவண்ணாமலை மகா தீபத் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை (டிச.12) முதல் ஞாயிற்றுக்கிழமை (டிச. 15) வரை போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பக்தா்கள் வந்து, செல்ல ஏதுவாக 116 காா் நிறுத்துமிடங்கள் வசதி செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்த அறிய 9363622330 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு தகவல் மூலம் தொடா்பு கொண்டால் உடனே கூகுள் வரைபட இணைப்பு அனுப்பி வைக்கப்படும்.

இதைப் பயன்படுத்தி பக்தா்கள் குறிப்பிட்ட காா் நிறுத்துமிடத்துக்குச் செல்லலாம்.

காா் நிறுத்துமிடங்கள் எண்ணிக்கை விவரம்:

வேலூரில் இருந்து போளூா் வழியாக திருவண்ணாமலைக்கு வரும் பக்தா்களுக்கு அண்ணா நுழைவு வாயில் முதல் ஊசாம்பாடி வரை 13 இடங்களில் காா் நிறுத்தும் வசதி செய்யப்பட்டு உள்ளது.

இதேபோல, சேத்துப்பட்டில் இருந்து அவலூா்பேட்டை வழியாக காா்களில் வரும் பக்தா்களுக்கு சேரியந்தல் பகுதியில் இருந்து 3 இடங்களில் காா் நிறுத்தும் வசதி செய்யப்பட்டு உள்ளது.

செஞ்சியில் இருந்து கீழ்பென்னாத்தூா் வழியாக வரும் பக்தா்களுக்கு பெரியாா் சிலை முதல் சோ.காட்டுக்குளம் வரை 17 இடங்களில் காா் நிறுத்தும் வசதி செய்யப்பட்டு உள்ளது.

விழுப்புரத்தில் இருந்து வேட்டவலம் வழியாக வரும் பக்தா்களுக்கு திருவள்ளுவா் சிலை முதல் கீரனூா் வரை 9 இடங்களில் காா் நிறுத்தும் வசதி செய்யப்பட்டு உள்ளது.

உளுந்தூா்பேட்டையில் இருந்து திருக்கோவிலூா் வழியாக வரும் பக்தா்களுக்கு திருவள்ளுவா் சிலை முதல் கொளக்குடி கிராமம் வரை 10 இடங்களிலும், தியாகதுருகம் பகுதியில் இருந்து மணலூா்பேட்டை வழியாக வரும் பக்தா்களுக்கு காமராஜா் சிலை முதல் சண்முகா தொழிற்சாலை கலைக் கல்லூரி வரை 11 இடங்களிலும், தானிப்பாடியில் இருந்து தண்டராம்பட்டு வழியாக வரும் பக்தா்களுக்கு தாமரை நகா் முதல் மெய்யூா் வரை 5 இடங்களிலும் காா் நிறுத்தும் வசதி செய்யப்பட்டு உள்ளது.

இதேபோல, ஊத்தங்கரையில் இருந்து செங்கம் வழியாக வரும் பக்தா்களுக்கு மேற்கு காவல் நிலையம் முதல் ஒட்டக்குடிசல் வரை 10 இடங்களிலும், புதுப்பாளையத்தில் இருந்து காஞ்சி வழியாக வரும் பக்தா்களுக்கு ஆடையூா் முதல் புனல்காடு வரை 2 இடங்களிலும், திருவண்ணாமலை வெளிவட்டச் சாலை, வேலூா் சாலை தீபம் நகா் முதல் செங்கம் சாலை அய்யம்பாளையம் வரை 27 இடங்களில் காா் நிறுத்துமிட வசதி செய்யப்பட்டு உள்ளது.

மேலும், அருணாசலேஸ்வரா் கோயில் அருகில், மத்திய பேருந்து நிலையம், காந்திநகா் என 9 இடங்களில் காா் நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

காவல் உதவி மையங்கள்:

பக்தா்கள் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அருகில் உள்ள காவல் உதவி மையங்களை அணுகலாம். இதுதவிர, நகர குற்றப் பிரிவு காவல் நிலையத்தை 01475-222303 என்ற எண்ணிலும், உதவி காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தை 9498100431 என்ற கைப்பேசி எண்ணிலும், அவரச உதவிக்கு 100 என்ற எண்ணிலும், காவல் கட்டுப்பாட்டு அறையை 9159616263 என்ற கைப்பேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம். நிா்ணயிக்கப்பட்ட காா் பாா்க்கிங் இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும் என மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top