Close
டிசம்பர் 19, 2024 5:04 காலை

திருவண்ணாமலையில் மத்திய குழு நேரில் பார்வையிட்டு ஆய்வு

மண் சரிவுகள் ஏற்பட்ட இடத்தினை பார்வையிட்ட மத்திய குழுவினர்

புயல் மழையால் திருவண்ணாமலை மலையின் மண் சரிவு மற்றும் மழை வெள்ளத்தால் பல்வேறு இடங்களில் பயிர் சேதமானதை மத்திய குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெஞ்சல் புயல் மழை பாதிப்புகளை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் முன்னிலையில் மத்திய குழு ஆய்வை சேர்ந்த ஜல் சக்தி அபியான் திட்ட இயக்குனர் சரவணன், நெடுஞ்சாலைகள் மற்றும் சாலை போக்குவரத்து அமைச்சகம் பொறியாளர் தனபால் குமரன், டில்லி ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம் இயக்குனர் பாலாஜி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

திருவண்ணாமலை மலை அடிவாரத்தில் உள்ள மண் சரிவு ஏற்பட்ட இடத்தினை மத்திய குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.

தொடர்ந்து திருவண்ணாமலை அடுத்த சின்ன காங்கேயனூர் ஊராட்சிக்கு உட்பட்ட சம்பதனூர் கிராமத்தில் கன மழையின் காரணமாக சாலைகள் சேதமடைந்துள்ளதை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.

மேலும் அப்பகுதியில் பயிரிடப்பட்ட நெருப்பயிர்கள் மற்றும் தோட்டக்கலை பயிர்களான மரவள்ளி கிழங்கு மற்றும் சம்பங்கி பூ கரும்பு ஆகியவை சேதமடைந்துள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். அதனை தொடர்ந்து கீழ்பெண்ணாத்தூர் வட்டம் கோணலூர் ஊராட்சியில் புயல் கனமழையின் காரணமாக சேதம் அடைந்த பயிர்களை மத்திய குழுவினர் பார்வையிட்ட ஆய்வு செய்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ராம் பிரதீபன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top