நாமக்கல் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழையால், இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 12ம் தேதி காலை முழுவதும் இன்று காலை வரை விட்டு விட்டு, தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் இன்று 13ம் தேதி விடுமுறை அறிவிக்கப்படுகிறது, என தெரிவித்துள்ளார்.
இன்று 13ம் தேதி காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பதிவான மழையளவு விபரம்:
நாமக்கல் 30 மி.மீ., கலெக்டர் ஆபீஸ் 17.50 மி.மீ., குமாரபாளையம் 7.60 மி.மீ., மங்களபுரம் 61.20 மி.மீ., மோகனூர் 34 மி.மீ., பரமத்திவேலூர் 28 மி.மீ., புதுச்சத்திரம் 29 மி.மீ., ராசிபுரம் 29 மி.மீ., சேந்தமங்கலம் 28 மி.மீ., திருச்செங்கோடு 14 மி.மீ., கொல்லிமலை செம்மேடு 58 மி.மீ.