Close
டிசம்பர் 15, 2024 2:47 மணி

வருகின்ற 30ம் தேதியன்று நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு ஜெயந்தி விழா: 1 லட்சத்து 8 வடை மாலை அலங்காரம்..!

கடந்த ஜன. 11ம் தேதி நடைபெற்ற, ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவில் 1 லட்சத்து 8 வடை மாலை அலங்காரத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயர் (பழைய படம்).

நாமக்கல் :

ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு, வரும் 30ம் தேதி, நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைமாலை அலங்காரம் மற்றும் சிறப்பு அபிசேகம் நடைபெற உள்ளது.

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. 18 அடி உயரத்தில், கைகூப்பி வணங்கிய கோலத்தில் சுவாமி பக்தர்களுக்கு இரவு பகல் 24 மணி நேரமும் அருள்பாலித்து வருகிறார்.

தமிழகம் மட்டுமின்றி, வட மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்து வருகின்றனர். தினசரி காலை 9 மணிக்கு ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு 1,008 வடை மாலை சாத்துபடி செய்யப்படும்.

பின்னர் 10 மணிக்கு அபிசேகம் நடைபெறும். மார்கழி மாதம் அமாவாசை தினத்தில் மூல நட்சத்திரத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயர் பிறந்தததாக ஐதீகம், இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் அந்த நாளில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு வருகிற டிச. 30ம் தேதி, மார்கழி அமாவாசை மூலம் நட்சத்திரத்தில், ஸ்ரீ ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடைபெற உள்ளது.

இதையொட்டி 30ம் தேதி அதிகாலை 5 மணிக்கு ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைமாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் நடைபெறும். பின்னர் மகா தீபாரதணை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.

அதைத்தொடர்ந்து, காலை 11 மணிக்கு நல்லெண்ணெய், சீயக்காய், திருமஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள் சந்தனம், உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைறும்.

பின்னர் சுவாமிக்கு தங்கக்கவசம் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதணை நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் தென்பாண்டியன் நல்லுசாமி, திருக்கோயில் இ.ஓ. மற்றும் அறநிலையத்துறை உதவி கமிஷனர் இளையராஜா மற்றும் குழுவினர் செய்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top