Close
டிசம்பர் 15, 2024 1:57 காலை

தீபத் திருவிழாவில் லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம்

பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய அமைச்சர் வேலு

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 4ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தீபத் திருவிழாவின் முக்கிய திருவிழாவான மகா தீப திருவிழா நேற்று காலை பரணி தீபம் விழா மற்றும் நேற்று மாலை , அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

இந்நிகழ்வை காண சுமார் 20 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர்.

அவ்வாறு வரும் பக்தர்களுக்கு திருவண்ணாமலை கிரிவலப் பாதை முழுவதும் சிறப்பு அன்னதானங்கள் வழங்கப்பட்டது.

அன்னதானம் வழங்குபவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கி இருந்தனர். மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கிய இடங்களில் அன்னதானங்கள் நடைபெற்றது.

ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரமம்

கிரிவலப் பாதையில் உள்ள மகான் ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரமத்தில் நேற்று காலையில் இருந்தே தொடர் அன்னதான நிகழ்வு நடைபெற்றது. .

இந்நிகழ்ச்சியில் , ஓய்வு பெற்ற நீதி அரசர் சொக்கலிங்கம், மற்றும் ஓய்வு பெற்ற நீதி அரசர் ஞானப்பிரகாசம், சென்னை ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன், ஆகியோர் கலந்து கொண்டு அன்னதான நிகழ்ச்சியை துவங்கி வைத்தனர். சுமார் 25 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் கிரிவலம் வரும் பக்தர்களுக்கு அன்னதானம் மட்டும் வழங்காமல் லட்டு ஜிலேபி போன்ற இனிப்பு வகைகளும் நேற்று இரவு சூடான பாதாம் பால் மற்றும் ஆப்பிள் ,மாதுளை  வாழைப்பழம் என பழங்களும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு வழங்கினார்கள்.

மாவட்ட திமுக

மாவட்ட திமுக சார்பில் தீபத் திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் 60 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை கிரிவலப்பாதை, கலைஞா் சிலை அருகில், திருமஞ்சன கோபுரம் பகுதி தூய்மை அருணை அலுவலகம், வேட்டவலம் சாலை, காந்தி சிலை ஆகிய 4 இடங்களில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிகழ்ச்சி தொடக்க விழாவுக்கு, திமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன் தலைமை வகித்தாா். அண்ணாதுரை எம்.பி., தலைமை செயற்குழு உறுப்பினா் இரா.ஸ்ரீதரன், கிரி எம்எல்ஏ, மாவட்டப் பொருளாளா் பன்னீா்செல்வம், மாவட்ட துணைச் செயலா் ப்ரியா விஜயரங்கன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர திமுக செயலா் காா்த்திவேல்மாறன் வரவேற்றாா்.

தமிழக பொதுப் பணித் துறை அமைச்சரும், திமுக உயா்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினருமான எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு சுமாா் 60 அயிரம் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தாா்.

அறுசுவை உணவுகள் தயாரிக்கப்பட்டு காலை முதல் மாலை தீபம் ஏற்றும் வரை பக்தா்களுக்கு வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், மாவட்ட அமைப்பாளா்கள் டி.வி.எம்.நேரு, காலேஜ் ரவி, ஏ.ஏ.ஆறுமுகம், விஜயராஜ், நகா்மன்ற துணைத் தலைவா் ராஜாங்கம், மாவட்ட அணிகளின் நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மேலும் சென்னையில் இருந்தும் மதுரை திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் அன்னதான அறக்கட்டளை குழுவினர்கள் கிரிவலப் பாதை முழுவதும் பக்தர்களுக்கு அறுசுவை உணவுகளை வழங்கினார்கள்.

ஸ்ரீ சேஷாத்ரி ஆசிரமத்தில் அன்னதானம் வழங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top