Close
டிசம்பர் 15, 2024 8:46 காலை

மண் சரிவு ஏற்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்த உயர் நீதிமன்ற நீதிபதி

மண் சரிவு ஏற்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்த உயர் நீதிமன்ற நீதிபதி

திருவண்ணாமலையில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து அப்பகுதி மக்களின் குறைகளை  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர் கேட்டறிந்தார்.

தமிழகம் முழுவதும் புயல் காரணமாக கடந்த 1-ஆம் தேதி பலத்த மழை பெய்தது. திருவண்ணாமலையில் பெய்த பலத்த மழையால், மகா தீபம் ஏற்றப்படும் மலையின் அடிவாரத்தில் உள்ள வ.உ.சி. நகா் 11-வது தெருவில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது.

இதில் 15-க்கும் மேற்பட்ட வீடுகளில் மண், சேறு, கற்கள் புகுந்து சேதமடைந்தன. இந்த இடிபாடுகளில் சிக்கி 5 சிறாா்கள், தம்பதி உள்பட 7 போ் இறந்தனா்.

இந்நிலையில் மண் சரிவு ஏற்பட்ட இடம் மற்றும் அப்பகுதியை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுந்தர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இடுப்பாடுகளில் சிக்கி மீட்கப்பட்ட இடங்களையும் பார்வையிட்டு இது குறித்த விவரங்களையும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் இடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள புதையுண்ட வீடுகள் மற்றும் மண் மேடுகளை பார்வையிட்டார் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.

முன்னதாக மாவட்ட ஆட்சியர் பொதுமக்களை சந்தித்து பேசுகையில் , நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் 3 தலைமுறைகளாக இருக்கும் மக்கள் முதல் தலைமுறைகள் வேறு இடம் பார்த்து சென்றிருந்தால் தற்போது இந்த இடத்தில் இது போன்ற நிகழ்வு நடந்திருக்காது .அவர்களது மனநிலையும் மாறி இருக்கும் என கூறினார்.

தற்பொழுது கூட மலையடிவாரத்தில் குடியிருக்கும் மக்கள் எந்த தைரியத்தில் இருக்கிறார்கள் என்றால் நமக்கு மேலே பல குடியிருப்புகள் உள்ளது நமக்கு ஒன்னும் ஆகாது என்று தைரியத்தில் இருக்கிறீர்கள் . அடித்தளம் ஆட்டம் கண்டால் அனைத்தும் சரியும் என்றும் நமக்கு உயிர் தான் முக்கியம் அடுத்த தலைமுறையை நாம் கொண்டு செல்ல உயிர் முக்கியம் என்றும் பேசினார்.

அப்போது ஒரு குடியிருப்பு வாசி உயிர் தான் முக்கியம், உயிர் மீது பயம் இருக்கிறது என்று கூறியதை வரவேற்ற ஆட்சியர் அவரிடம் கைகுலுக்கினார். உயிர் இருந்தால் அனைத்தையும் சம்பாதித்துக் கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.

மேலும் பேசி ஆட்சியர் இங்கிருந்து அனைவரும் வேர் இடத்திற்கு சென்றால் அந்த இடத்தில் தேவையான மருத்துவ வசதி, சாலை வசதி, குடிநீர் வசதி, உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படும் என தெரிவித்தார்.

மேலும் ஏதேனும் தங்களுக்கு வேண்டுமென்றால் ஆட்சியர் அலுவலகத்தில் என்னை சந்திக்கலாம் என்று உறுதியளித்தார்.

ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுதாகா், மாவட்ட வருவாய் அலுவலா் இராம்பிரதீபன், திருவண்ணாமலை வட்டாட்சியா் துரைராஜ் மற்றும் வருவாய்த் துறை, காவல் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top