Close
டிசம்பர் 15, 2024 11:52 காலை

நாமக்கல் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை..!

நாமக்கல்:

நாமக்கல் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன் மனைவி உட்பட 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள, அ.வாழவந்தி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (50), கூலி தொழிலாளி.

அவரது மனைவி பூங்கொடி (45) இவர்களது மகன் சுரேந்தர் (26). இவர்கள் மூவரும் நேற்று இரவு தங்களது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மூவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதணைக்காக நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், குடும்ப தகராறு காரணமாக அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவருகிறது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top