Close
டிசம்பர் 15, 2024 12:23 மணி

நாமக்கல்லில் தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணையில் ரூ. 10.91 கோடி மதிப்பில் 1,000 வழக்குகளுக்கு தீர்வு..!

நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில், வழக்கில் சம்மந்தப்பட்டவர்களுக்கு இழப்பீடு தொகையை மாவட்ட நீதிபதி பாலகுமார் வழங்கினார்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற, தேசிய லோக் அதாலத்தில் ரூ. 10.91 கோடி மதிப்பில் 1,000 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்திரவின்படி, தேசிய அளவிலான லோக் அதாலத் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி, மாவட்ட நீதிபதி பாலகுமார் ஆகியோர் மேற்பர்வையில் லோக் அதலாத் நடைபெற்றது.

நாமக்கல் ஒருஙகிணைந்த கோர்ட்டில் முதலாவது அமர்வில் நீதிபதிகள் சாந்தி, விஜய்கார்த்திக் மற்றும் பிரவீனா ஆகியோரும், 2வது அமர்வில் நீதிபதிகள் விஜயகுமார், கண்ணன் மற்றும் விக்னேஷ்மது ஆகியோரும், திருச்செங்கோடு கோர்ட்டில் முதலாவது அமர்வில் நீதிபதிகள் மோகன்குமார், மற்றும் சுரேஷ்பாபு ஆகியோரும்,

2வது அமர்வில் நீதிபதி சரண்யா மற்றும் வக்கீல் கல்பனா ஆகியோரும், ராசிபுரம் கோர்ட்டில் நீதிபதி திலீப் மற்றும் வக்கீல் ஜெயராஜ் ஆகியோரும், பரமத்தி கோர்ட்டில் முதலாவது அமர்வில் நீதிபதி நலினகுமார் மற்றும் வக்கீல் பிரபு ஆகியோரும், 2வது அமர்வில் நீதிபதி கைலாஷ் மற்றும் வக்கீல் வெற்றிவடிவேல் ஆகியோரும்  குமாரபாளையம் கோர்ட்டில் நீதிபதி மாலதி மற்றும் வக்கீல் நடராஜன் ஆகியோரும் அடங்கிய அமர்வுகளில் வழக்குகள் விசாரணை நடைபெற்றது.

விபத்துகள் தொடர்பான வழக்குகள், செக் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், ஜீவனாம்சம் வழக்குகள், தொழிலாளர் நலன் தொடர்பான வழக்குகள், மின்சார பயன்பாடு, வீட்டு வரி மற்றும் இதர பொது பயன்பாட்டு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

இந்த லோக் அதாலத்தில் மாவட்டம் முழுவதும், மொத்தம் 2670 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. மொத்தம் 1000 வழக்குகளுக்கு, ரூ.10 கோடியே 91 லட்சத்து, 96 ஆயிரத்து 837 மதிப்பில் தீர்வு காணப்பட்டது.

மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி உத்திரவின் பேரில், மாவட்ட நீதிபதி பாலகுமார், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் வேலுமயில் ஆகியோர் மக்கள் நீதிமன்றத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top