காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் 5 ஊராட்சி ஒன்றியங்களில் செயல்பட்டு வருகிறது. இதனால் கிராமப்புற மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள இத்திட்டம் பயன்படுவதால் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
இந்நிலையில் காஞ்சிபுரம் நகராட்சி கடந்த சில ஆண்டுக்கு முன்பு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் மாநகராட்சி எல்லை விரிவுபடுத்தும் நோக்கில் அருகில் உள்ள 11 ஊராட்சிகளை இணைக்க அறிவிப்பு செய்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 11 கிராம ஊராட்சிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள காவலன் கேட் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்துடன் இணைந்து நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில், மக்களிடம் எந்தவித கருத்து கேட்பு கூட்டம் நடத்தாமல், மாநகராட்சியுடன் இணைக்கும் போது 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் ரத்து செய்யப்படும் என்பது, ஏழை மக்களின் அனைவரின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும்.
மாநகராட்சியுடன் கிராம ஊராட்சிகளை இணைப்பதற்கு கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டால் அனைத்துவித வரிகளும் உயரும். ம் இதனால் எந்த விதத்திலும் பொது மக்களுக்கு வாழ்வாதாரம் பெருகாது என்பதை கருத்தில் கொண்டு இதனை கைவிட வேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது மட்டும் இல்லாமல் ஏற்கனவே மாநகராட்சியில் இணைக்கப்பட்ட ஊராட்சிகள் எந்தவித வாழ்வாதாரத்தில் பொருளாதாரத்தில் உயரவில்லை என்பது எடுத்துக்காட்டாக உள்ளதாகவும் போராட்ட குழுவினர் தெரிவிக்கின்றனர்.
மாநகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என ஊரக உள்ளாட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர் நிர்வாகத்தை கேட்டுக் கொள்வதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.