Close
டிசம்பர் 18, 2024 11:50 மணி

போக்குவரத்து மாற்றங்களை திரும்ப பெற கோரி காந்தி சாலை வியாபாரிகள் போராட்டம்

காஞ்சிபுரம் காந்தி சாலை வியாபாரிகள் , ஊழியர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் போக்குவரத்து மாற்றங்களை திரும்ப பெற கோரி காஞ்சிபுரம் காந்தி சாலையில் 500க்கும் மேற்பட்டோர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்..

கோயில் நகரம் பட்டு நகரம் என கூறப்படும் காஞ்சிபுரம் நாள்தோறும் பல்லாயிரகணக்கான மக்கள் பல்வேறு மாநில மாவட்டங்களில் இருந்து வந்து செல்கின்றனர்.

இது மட்டுமில்லாத காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள கிராமம் மற்றும் நகர பொதுமக்கள் காஞ்சிபுரம் நகரில் அன்றாட தேவைக்காக வரவேண்டிய நிலை உள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரத்தின் பிரதான மையப் பகுதியாக விளங்குவது காந்தி சாலையாகும். இந்த சாலையில் 350 க்கும் மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளது. இதில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்பகுதியில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக தொடர் புகார்களின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல் துறை இணைந்து போக்குவரத்து மாற்றத்தை ஏற்படுத்தி தற்போது வரை போக்குவரத்து நெரிசலின்றி செல்வதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இது ஒரு புறம் இருக்க வியாபாரிகள் தங்களது வியாபாரங்கள் பெருத்த சரிவை கடந்த சில மாதங்களில் கொண்டுள்ளது எனவும், இந்தப் போக்குவரத்து மாற்றத்தை திரும்பப் பெற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் காவல்துறைக்கு கோரிக்கை வைத்தது.

இதன் அடிப்படையில் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி இன்று காந்தி சாலை வியாபாரிகள் மற்றும் கடை ஊழியர்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து காஞ்சிபுரம் தேரடியில் இருந்து பழைய ராஜாஜி மார்க்கெட் வரை கைகோர்த்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்க உள்ளனர்..

பொதுமக்கள் பெரிதும் வரவேற்ற நிலையில், வியாபாரிகள் இதனால் பாதிப்படைவதாக கூறி திரும்ப பெற கூறுவதால் மாவட்ட நிர்வாகம் மற்றொரு தரப்பினர் கோரிக்கையும் ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top