காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூர் பகுதியில் மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம் செயல் பட்டு வருகிறது. இதன் கீழ் மருத்துவக் கல்லூரி பொறியியல் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்வி நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் மீனாட்சி மருத்துவமனை கல்லூரி வளாகத்தில் பதினெட்டாவது பட்டமளிப்பு விழா வேந்தர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. கௌரவ வேந்தர் திருமதி கோமதி ராதாகிருஷ்ணன் மற்றும் இணை வேந்தர் ஆகாஷ் பிரபாகர் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினராக மோகன் நீரிழிவு சிறப்பு மைய தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் மோகன் கலந்துகொண்டு 705 இளங்கலை மாணவர்கள், 103 மேற்படிப்பு மாணவர்கள் 24 முனைவர் பட்ட மாணவர்கள் என 832 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.
இதில் இளங்கலை மருத்துவர் ஹரிதாகுமாரி 11 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.
மேலும் இந்நிகழ்வில் எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் ” இட்லி பாட்டி திருமதி. கமலாத்தாள் என்பவருக்கு மனிதாபிமான சேவைக்கான 2024 விருது வழங்கப்பட்டு, அவரது மனிதாபிமான முயற்சிகளை ஆதரிக்கும் வகையில் தொடர ரூபாய் 2 லட்சம் காசோலையாக வழங்கப்பட்டது.
இதேபோல் மெட்ராஸ் நீரிழிவு நோய் ஆராய்ச்சி மைய நிறுவனத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாணவர்கள் பெற்றோர்கள் மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்தின் பேராசிரியர்கள் ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்