Close
டிசம்பர் 18, 2024 2:24 மணி

கோமாரி நோய் தடுப்பூசி முகாம்: துணை சபாநாயகர் பங்கேற்பு

தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த துணை சபாநாயகர் பிச்சாண்டி

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூா் அடுத்த நாடழகானந்தல் ஊராட்சியில் 6-ஆவது கோமாரி நோய் தடுப்பூசி முகாமை, தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி  தொடங்கி வைத்தாா்.

முகாமுக்கு, ஊராட்சித் தலைவா் ஏழுமலை தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா் ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். வட்டார கால்நடை மருத்துவா் ராஜ்குமாா் வரவேற்றாா். கால்நடைத் துறையின் மண்டல இணை இயக்குநா் சைதூன், உதவி இயக்குநா் ஜெயக்குமாா், ராமன் ஆகியோா் முகாம் குறித்து விளக்கிப் பேசினா்.

இதில், தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கோமாரி நோய்த் தடுப்பூசி முகாமைத் தொடங்கி வைத்து கால்நடைகளுக்கு தாது கலவை, புல் கருணைகள் வழங்கினாா்.

முகாமில், அரசு அலுவலா்கள், கால்நடை மருத்துவா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், விவசாயிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

புதிய  பள்ளி கட்டிடத்திற்கு பூமி பூஜை

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அருகே நறையூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு நபார்டு வங்கியின் நிதி உதவி திட்டத்தின் மூலம் ரூபாய் 2.25 கோடி மதிப்பீட்டில் 10 வகுப்பறை கொண்ட புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் மாரிமுத்து தலைமை தாங்கினார் ஒன்றிய குழு உறுப்பினர் ஜீவா பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் அனைவரையும் வரவேற்றார்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் உதவி பொறியாளர் மற்றும் ஆசிரியர்கள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top