Close
டிசம்பர் 18, 2024 10:52 காலை

மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய எம்எல்ஏ

மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கிய சரவணன் எம்எல்ஏ

மஷார் அரசு மேல்நிலைப் பள்ளியில் 77 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை கலசப்பாக்கம் எம் எல் ஏ சரவணன் வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் மஷார் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 77 மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு புதுப்பாளையம் ஒன்றிய குழு தலைவர் சுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், மாவட்ட கவுன்சிலர் மனோகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் விஜய் ஆனந்த் அனைவரையும் வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் பங்கேற்று தமிழக அரசு வழங்கும் இலவச சைக்கிள் களை 39 மாணவர்களுக்கும் 38 மாணவிகளுக்கும் வழங்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், இல்லம் தேடி கல்வி ,கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை, பள்ளிகளில் காலை உணவு திட்டம், இலவச நோட்டு புத்தகங்கள் என பல்வேறு திட்டங்களை பள்ளி மாணவ மாணவிகளுக்கு நமது தமிழக முதல்வர் வழங்கி வருகிறார்.

மாணவ மாணவிகள் நன்கு படித்து நமது மாவட்டத்திற்கும் நமது தொகுதிக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தி பேசினார்.

நிகழ்ச்சியில் பஞ்சாயத்து தலைவர் லட்சுமி ,பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், ஒன்றிய துணைத் தலைவர் தாரணி மற்றும் கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் ,வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ,பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top