Close
டிசம்பர் 19, 2024 4:48 காலை

நாட்டு செங்கல் சூலைகளை தொடர்ந்து நடத்த அனுமதிக்க கோரி கலெக்டரிடம் மனு..!

மாவட்ட கலெக்டர் உமா

நாமக்கல் :

தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காத்திட, நாட்டு செங்கல் சூளைகளை தொடர்ந்து நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

நாமக்கல் மாவட்டம் போடிநாய்க்கன்பட்டியை சேர்ந்த நாட்டு செங்கல் சூலை உரிமையாளர்கள் மற்றும் தொழிலளர்கள், கலெக்டரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தாலுகா, எருமப்பட்டி ஒன்றியத்தில் கைகளினால் செங்கல் செய்யக் கூடிய நாட்டு செங்கல் சூலைகளை பல ஆண்டுகளாக நடத்தி வருகின்றோம். மாவட்ட நிர்வாகம், கை செங்கல் சூலை மூலம் காற்று மாசுபடுகிறது எனக்கூறி, நாட்டு செங்கல் தொழிலை நடத்தக்கூடாது என்றும், 2 மாதத்திற்குள் அனைத்து நாட்டு செங்கல் சூலைகளையும் நிரந்தரமாக மூடவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

கை செங்கல் சூலையில் செங்கல் எரிப்பதற்கு விறகு மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். இவற்றில் எந்த பிளாஸ்டிக் மற்றும் கெமிக்கல் பொருட்கள் எதுவும் பயன்படுத்துவதில்லை. ஆதலால், அதிகாரிகள் கூறுவதுபோல் காற்று மாசுபடாது என தெரிவித்துக் கொள்கிறோம்.

கை செங்கல் சூலையை வாழ்வாதாரமாகக் கொண்டு எங்கள் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகிறது. தற்போது, அனைத்து செங்கல் சூலைகளையும் மூடும் நிலையில், எங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம் உள்ளது.

இதில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு செங்கல் தயாரிப்பு தவிர வேறு தொழில் எதுவும் தெரியாது. அதனால், நாட்டு செங்கல் சூலைகளை தொடர்ந்து நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top