Close
டிசம்பர் 18, 2024 10:05 காலை

அண்ணாமலையார் கோயில் தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு தரிசனம்: அழைத்துச் சென்ற ஆட்சியர்

அண்ணாமலையார் கோவிலில் தூய்மை பணியாளர்களுடன் மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா, பெளா்ணமியில் பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் சென்றனா். இந்த நிலையில், திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப் பாதை தூய்மைப் பணியில் திருவண்ணாமலை மாநகராட்சி, மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறைகளைச் சோ்ந்த தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டனா்.

இவா்களை சிறப்பிக்கும் வகையில்  ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்,  தூய்மை பணியாளர்களை அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு தரிசனத்திற்கு அழைத்துச் சென்று தூய்மை பணியாளர்களை சிறப்பித்து அவர்களின் பணியினை பாராட்டி வாழ்த்து தெரிவித்து பேசினார் .

அப்போது ஆட்சியர் பேசியதாவது

தீபத்திருவிழா மற்றும் பௌர்ணமி நாட்களில் திருவண்ணாமலைக்கு திரளான பக்தர்கள் வருகை புரிகின்றனர் .மக்கள் பணியே மகேசன் பணி என்று எண்ணி அனைத்து குப்பைகளையும் அகற்றி கிரிவலப் பாதையில் தூய்மையாக பராமரித்து குப்பைகள் அனைத்தையும் துரிதமாக துப்புரவு பணியில் ஈடுபட்ட உங்கள் அனைவருக்கும் மனதார பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தீபத் திருவிழாவின்போதும் அதைத் தொடர்ந்து பௌர்ணமியின் போதும் தூய்மை பணியாளர்கள் நான்காயிரம் பேர் துப்புரவு பணியில் ஈடுபடுக்கப்பட்டு மூன்று ஷீப்ட்டுகளாக தூய்மை பணி துரிதமாக மேற்கொள்ளப்பட்டது.

மேலும் தூய்மை பணியாளர்கள் உடனுக்குடன் குப்பைகளை அகற்றி சுற்றுப்புறம் தூய்மையாக இருப்பதற்கு தூய்மை பணியில் மிகச் சிறப்பாக ஈடுபட்டீர்கள்.
நமது மாவட்டத்தில் தூய்மை பணியானது முன் உதாரணமாக இருக்கிறது.
இதற்கு காரணமான உங்களை எண்ணி பாராட்டுகிறேன்.
தூய்மை பணியாளர்கள் தூய்மை பணிகளை மேற்கொள்ளும் போது கட்டாயம் கையுறைகளை அணிந்து பாதுகாப்பாக பணியினை மேற்கொள்ள வேண்டும் . மேலும் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனை தூய்மை தூய்மை பணியாளர்கள் பயன்படுத்திக்கொண்டு தங்கள் உடல் நலனை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் பேசினார்.

சிறப்பு மத்திய விருந்து

தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு உணவு பரிமாறி அவர்களுடன் உணவு சாப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராம் பிரதீபன், மாநகராட்சி மேயர் நிர்மலா வேல்மாறன், அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம், மாநகராட்சி கமிஷனர்,கோவில் இணை ஆணையர் மற்றும் அரசு அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தூய்மை பணியாளர்களுக்கு உணவு பரிமாறிய ஆட்சியர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top