சாத்தூர் அணையில் முதலைகள் நடமாட்டத்தால் சுற்றுலா பயணிகள் வீதி அடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சாத்தனூர் அணை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வந்த தொடர் மழையின் காரணமாக தனது முழு கொள்ளளவான 119 அடியில் தற்போது 117 அடி எட்டியுள்ளது.
அணையின் முழு கொள்ளளவு எட்டி வரும் நிலையில் பாதுகாப்பு கருவி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும்.
அவ்வாறு தண்ணீர் வெளியேறும் வழியாக ராட்சத முதலை ஒன்று சுற்றுலா பயணிகள் அணையை சுற்றி பார்க்கும் வழியில் வெளியேறியதால் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
செவ்வாய்க்கிழமை அதிகாலை தென்பெண்ணை ஆற்றில் இருந்து ராட்சஷ முதலை ஒன்று 11 கண் மதகு வெளியே வந்து பயணிகள் சுற்றிப் பார்க்கக் கூடிய நடைபாதையின் மீது ஹாயாக சென்றுள்ளது .காலை நேரம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் யாரும் இல்லை அங்கிருந்த ஒரு சில பணியாளர்கள் மெகா சைஸ் முதலையை பார்த்து அச்சமடைந்து ஓடினர்.
இதனைத் தொடர்ந்து வன சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது முதலைப் பண்ணையில் இருந்து வந்த பணியாளர் ஒருவர் ராட்சச முதலையை லாவகமாக கோலால் தள்ளி மீண்டும் ஆற்றிற்க்கே விரட்டினார்.
அங்கிருந்த பணியாளர்கள் ராட்சசன் முதலை சுற்றி திரிவது அறிந்து உடனே தகவல் தெரிவிக்கப்பட்டதால் மிகப்பெரிய ஆபத்திலிருந்து பொதுமக்களை காப்பாற்றியதாக அரசு அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர்.
மேலும் ஆற்றில் இருந்து முதலை வெளியே வந்த பகுதி கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். சாத்தனூர் அணையில் மீண்டும் முதலில் நடமாடிய சம்பவம் சுற்றுலா பயணிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாத்தனூர் அணையில் உள்ள முதலைப் பண்ணையில் சுமார் 400 முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகிற நிலையில் தென்பெண்ணை ஆற்றில் ஏராளமான முதலைகள் உள்ளன. இந்த முதலைகளால் உயிர் இழப்பும் ஏற்பட்டிருக்கிறது. 2020 ஆம் ஆண்டு ஆற்றில் முதலைகள் அதிகரித்து இருப்பதால் உள்ளே வர வேண்டாம் என வனத்துறையினர் சுற்றுலா பயணிகளை எச்சரித்ததும் குறிப்பிடத்தக்கது.