Close
டிசம்பர் 18, 2024 1:05 மணி

கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..!

கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் கலெக்டர் ஆபீஸ் முன்பு, விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் :

தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் 100 நாட்களும் வேலை வாய்ப்பு வழங்கக்கோரி, விவசாய தொழிலாளர் சங்கத்தினர் நாமக்கல் கலெக்டர் ஆபீஸ் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர், நாமக்கல் கலெக்டர் ஆபீஸ் முன்பு நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் வரதராஜ், அலகுராஜன், ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் 100 நாட்களும் வேலை வழங்க வேண்டும். இத்திட்டத்திற்கு நிதி குறைக்கக் கூடாது. விவசாய தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top