நாமக்கல் :
நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் முகாம் 20ம் தேதி நடைபெறுகிறது.
இது குறித்து கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகளின் வசதிக்காக, கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த மாதத்திற்கான கூட்டம், வரும் 20ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு கோட்ட அளவில் நடைபெறுகிறது. நாமக்கல் கோட்டத்திற்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம், நாக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கிலும், திருச்செங்கோடு கோட்டத்திற்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் பரமத்தி பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கிலும் நடைபெற உள்ளது.
சம்மந்தப்பட்ட ஆர்டிஓக்கள் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து விவசாயிகளிடம் இருந்து மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிவார்கள்.
இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, தங்களது பயிர் சாகுபடிக்குத் தேவையான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இடுபொருள் இருப்பு விவரங்கள், வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன், தங்களது கோரிக்கைகளையும் தெரிவித்து பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.