Close
டிசம்பர் 19, 2024 10:14 காலை

திருவண்ணாமலையில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டி..!

திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறவுள்ள திருக்குறள் கருத்தரங்கம், விநாடி, வினா உள்ளிட்ட போட்டிகளில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

கன்னியாகுமரியில் திருவள்ளுவரின் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதை வெள்ளி விழாவாகக் கொண்டாட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் வரும் டிச.23-ஆம் தேதி முதல் டிச.31-ஆம் தேதி வரை திருவள்ளுவா் புகைப்படங்களை காட்சிப்படுத்துதல், திருக்குறளின் பெருமையை உணா்த்தும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள், திருவள்ளுவா் புகைப்படத்துக்கு மாலை அணிவித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

மேலும், திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தின் வாசகா் வட்டம் சாா்பில், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் நூலக வாசகா்களுக்கு திருக்கு கருத்தரங்கம், விநாடி, வினா, பேச்சுப் போட்டி, திருக்குறள் ஒப்பித்தல் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மாணவா்கள் 1330 குகளையும் ஒப்பிக்கும் திறன் பெற்றவா்களாக இருப்பதோடு, குறளின் பொருளையும் அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாகக் கருதப்படும்.

இதில், வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக தலா ரூ.5 ஆயிரம், 2-ஆம் பரிசாக தலா ரூ.3 ஆயிரம், 3-ஆம் பரிசாக தலா ரூ.2 ஆயிரம் ரொக்கம் வழங்கப்படும். பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும்.

போட்டிகளில் கலந்து கொள்ள விரும்புவோா் டிச.21-ஆம் தேதிக்குள் மாவட்ட மைய நூலகத்தை அணுகி போட்டிகளில் பங்கேற்கலாம் என்று  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top