நாமக்கல் :
பார்லிமெண்டில் அம்பேத்கார் குறித்து விமர்சனம் செய்த, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைக் கண்டித்து, நாமக்கல்லில் காங்கிரஸ் மற்றும் அஹிம்சா சோசலிஸ்ட் கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசியல் சாசன 75 ஆம் ஆண்டு கொண்டாட்டங்கள் குறித்து, பார்லிமெண்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கார் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதைக் கண்டித்து, நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், நாமக்கல் பார்க் ரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட காங்கிரஸ் தலைவர் சித்திக் தலைமை வகித்தார்.
முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் வீரப்பன், பாச்சல் சீனிவாசன், மாநகர காங்கிரஸ் தலைவர் மோகன், பொதுக்குழு உறுப்பினர் ஜோதி, சாந்தி மணி, மகளிர் காங்கிரஸ் கார்த்தி, மாவட்ட சிறுபான்மை அணித்தலைவர் தாஜ், மாவட்ட எஸ் சி எஸ் டி பிரிவுத் தலைவர் பொன்முடி, முன்னாள் மாணவர் காங்கிரஸ் செயலாளர் பாலாஜி உள்ளிட்ட பலர் போராட்டத்தில் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர்.
அகிம்சா சோசியலிஸ்ட் கட்சி:
அம்பேத்கார் குறித்து விமர்சனம் செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, அகிம்சா சோசியலிஸ்ட் கட்சி நிறுவனத் தலைவர் காந்தியவாதி ரமேஷ் தலைமையில், நாமக்கல் பார்க் ரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய கணசங்கம் கட்சி நிறுவனத் தலைவர் பேராசிரியர் முத்துசாமி முன்னிலை வகித்தார். மாநகர காங்கிரஸ் மதிவாணன், திராவிட கழக மாவட்ட செயலாளர் பெரியசாமி, மதிமுக மாநகர செயலாளர் பாலு, இந்திய கணசங்கம் கட்சி துணைத் தலைவர்வர்கள் திருமலை, சுப்பிரமணி, செல்வராஜ், முத்து மற்றும் அசோகன், ராமச்சந்திரன் உள்ளிட்ட திரளானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினார்கள்.