நாமக்கல்:
நாமக்கல் பகுதியில் பெய்த மழையினால் நிரம்பியுள்ள உள்ள ஏரிகளை கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு அரசின் 7 அம்ச தொலைநோக்கு திட்டங்களில் ஒன்றான மகசூல் பெருக்கம் மகிழும் விவசாயி என்பதைநடை முறைப்படுத்தும் வகையில், கிராம அளவில் தன்னிறைவு மற்றும் ஒட்டு மொத்த வளர்ச்சியை பெற்றிடும் வகையில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித்திட்டம் 2021&-22 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாக கிராமத்தில் உள்ள தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டுவருதல், நீர்வள ஆதாரங்களை பெருக்குதல் மின் இணைப்பு மற்றும் சூரியசக்தி பம்ப்செட்டுகளுடன் நுண்ணீர் பாசனவசதி ஏற்படுத்துதல், வேளாண் விளை பொருட்களை மதிப்புக்கூட்டுத ல்செய்துசந்தைப்படுத்துதல்,
பண்ணைக்குட்டைகள் அமைத்தல் மற்றும் கிராம வேளாண் உட்கட்டமைப்பான உலர்களங்கள், சேமிப்புக்கிடங்குகள் அமைத்தல், கால்நடைகளின் நலன்காத்து பால் உற்பத்தியை பெருக்குதல் போன்ற அனைத்து துறை திட்டங்களும் ஒன்றிணைக்கப்பட்டு, கிராமத்தின் ஒட்டுமொத்த தன்னிறைவு வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்கீழ், நாமக்கல்வட்டம், தொட்டிப்பட்டியில் 2 ஏரிகள், வசந்தபுரத்தில் 1 ஏரி என மொத்தம் 3 ஏரிகள் ரூ.3 லட்சம் மதிப்பில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டத்தின்கீழ் தூர்வாரப்பட்டுள்ளது.
ஏரிகளில் உள்ள முட்புதர்கள் அகற்றப்பட்டுள்ளதையும், தூர்வாரப்பட்ட பிறகு குட்டைகளின் நீர்பிடிப்பு கொள்ளளவு முறையே 1,870 கனமீட்டர், 1,450 கனமீட்டர் மற்றும் 1,460 கனமீட்டர் அதிகரித்துள்ளதையும், ஏரிகளின் கொள்ளவு, ஏரிகளுக்கு நீர்வரத்து குறித்தும் கலெக்டர் ஆய்வு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து அப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களுடன் அவர் கலந்துரையாடினார்.