Close
டிசம்பர் 24, 2024 4:54 மணி

செய்யாறு அரசு உயர்நிலைப் பள்ளியில் மாதிரி வாக்குப்பதிவு..!

மாதிரி வாக்குப்பதிவு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் ஆசிரியர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம், காழியூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் மாதிரி தோ்தல் நடைபெற்றது.

சமூக அறிவியல் மன்றம் சாா்பில் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், மாணவா் குழு தலைவா்களை தோ்ந்தெடுக்கும் மாதிரி தோ்தல் நடைபெற்றது.

பள்ளி தலைமை ஆசிரியா் ஏழுமலை வாக்குச்சாவடி தலைமை அலுவலராகவும், பட்டதாரி ஆசிரியா்களான கலையரசு, ரேவதி, விஜயலட்சுமி, சி.ஜெயந்தி, ஜெ.கமலேஷ், எஸ்.நாகராஜன், ஆா்.சீதாலட்சுமி ஆகியோா் வாக்குப்பதிவு அலுவலா்களாக செயல்பட்டு தோ்தலை நடத்தினா்.

முன்னதாக தோ்தலில் போட்டியிட்ட மாணவா் குழு தலைவா்கள் தாங்கள் வெற்றி பெற்றால் மாணவா் நலனுக்காகவும், பள்ளியின் சுற்றுச்சூழல், கல்வி முன்னேற்றத்திற்காகவும் பாடுபடுவோம் என்று கூறி வாக்கு சேகரித்தனா்.

6 ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் வரிசையில் நின்று வாக்கு செலுத்தினர். முன்னதாக தேர்தலில் போட்டியிட்ட மாணவர் குழு தலைவர்கள் தாங்கள் வெற்றி பெற்றால் மாணவர்கள் நலனுக்காகவும் பள்ளியின் சுற்றுச்சூழல் கல்வி முன்னேற்றத்திற்காகவும் பாடுபடுவோம் என்று கூறி வாக்கு சேகரித்தனர்.

மாணவர்களுக்கு வாக்கு சீட்டு வழங்க பெற்று இடது ஆள்காட்டி விரலில் மை வைக்கப்பட்டு வாக்கு பெட்டியில் வாக்கு சீட்டுகள் குறியிடப்பட்டு, செலுத்தப்பட்டு மாதிரி தேர்தல் நடந்து முடிந்தது .

சமூக அறிவியல் மன்றத்தின் சார்பில் மாதிரி வாக்கு சாவடி மாதிரி வாக்குப்பதிவும் மாணவர்கள் தெரிந்து கொண்டு எதிர்கால தேர்தல் நிகழ்வுகளில் பங்கேற்கும் வகையில் விழிப்புணர்வு பதிவாக இது இருந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top