ஜவ்வாது மலை ஒன்றியத்தில் கட்டி முடிக்கப்பட்ட ஊராட்சி மன்ற கட்டிடங்கள் மற்றும் அங்கன்வாடி மையக் கட்டிடத்தை சட்டமன்ற உறுப்பினர் கிரி திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி ஜவ்வாது மலை ஒன்றியத்தில் உள்ள கல்லாத்தூர் ஊராட்சியில் ரூபாய் 22 லட்சத்தில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் மற்றும் தென்மலை ஊராட்சியில் ரூபாய் 23 லட்சத்தில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.
கட்டி முடிக்கப்பட்ட ஊராட்சி மன்ற கட்டிடங்களை ஊராட்சி மன்ற தலைவர்கள் சேமன், அன்பழகன் ஆகியோர் முன்னிலையில் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து புலியூர் ஊராட்சியில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய அங்கன்வாடி மையக் கட்டிடத்தை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பொதுமக்களுக்கு மற்றும் அங்கன்வாடி பள்ளி குழந்தைகளுக்கும் இனிப்புகள் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து கல்லாத்தூர், தென்மலை, அத்திப்பட்டு ,புலியூர் ஆகிய ஊராட்சிகளில் உள்ள இளைஞர்களுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்களான கிரிக்கெட் பேட் ,வாலிபால், பேஸ்கெட் பால், உட்பட ஐம்பத்துக்கும் மேற்பட்ட விளையாட்டு உபகரணங்களும், இளைஞர்கள் உடற்பயிற்சி செய்வதற்கான உடற்பயிற்சி உபகரணங்கள் உள்ளிட்டவை சுமார் மூன்று லட்சம் மதிப்பீட்டிலான விளையாட்டு உபகரணங்களையும் ஊராட்சி இளைஞர்களுக்கு கிரி எம்எல்ஏ வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சக்திவேல், செந்தில்குமார், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சகுந்தலா ராமஜெயம், ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள்,ஊராட்சி மன்ற தலைவர் ராமநாதன், திமுகவை தலைவர் கமலக்கண்ணன், துணை செயலாளர் ,ஒன்றிய குழு செயலாளர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், மாவட்ட பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ,கிராம நிர்வாக அலுவலர்கள், ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.