நாமக்கல் :
நாமக்கல் ஸ்ரீ கோகுல்நாதா மிஷன் கல்லூரி மாணவிகள் தஞ்சாவூர் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் கள ஆய்வு பயிற்சி மேற்கொண்டனர்.
நாமக்கல், ராமாபுரம்புதூரில் ஸ்ரீ கோகுல்நாதா மிஷன் பாராமெடிக்கல் கல்லூரி உள்ளது. இங்கு மருத்துவம் சம்மந்தமான பல்வேறு துறைகளில் ஏராளமான பாடப்பிரிவுகள் நடைபெற்று வருகின்றன.
இங்குள்ள நர்சிங் துறையில் படிக்கும் மாணவிகளுக்கு நேரடி பயிற்சி வழங்குவதற்காக, தஞ்சாவூரில் உள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு கள ஆய்வுக்காக அழைத்து செல்லப்பட்டனர். அந்த மருத்துமனையில் மனித வளத்துறை மேலாளர் செல்வபாண்டியன் மருத்துவமனையில் உள்ள துறைகளை பற்றி தெளிவாக விளக்கி கூறினார்.
மேலும் அங்குள்ள டாக்டர்கள் அவசர சிகிச்சைப் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு, ரத்த வங்கி ஆகிய 27 சிகிச்சை பிரிவுகள் பற்றி விளக்கமாக எடுத்துக் கூறினர். நர்சிங் பயிற்சி மாணவிகளுக்கு இந்த பயிற்சி மிகவும் பயன் உள்ளதாக அமைந்தது.