நாமக்கல் :
மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம், நாமக்கல்லில் நடந்தது.
மாநில இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளரும், பேரமைப்பின் ஈரோடு மாவட்ட தலைவருமான சண்முகவேல் தலைமை வகித்து, மாநில அளவில் இளைஞர் அணியை ஒருங்கிணைப்பது, மாவட்ட, நகர மற்றும் வட்டாரங்களுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்தல், புதிய உறுப்பினர் சேர்க்கை விரைவுப்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்கினார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின், நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் முன்னிலை வகித்து பேசும்போது, நாமக்கல் மாவட்டத்தில் பேரமைப்பின் இளைஞர் அணியை வலுப்படுத்துவதுடன், இளைஞர்கள் அனைவரும் ஜாதி, மதம், இனம், மொழி, அரசியல் கடந்து பேரமைப்பில் உறுப்பினராக இணைந்து கொள்ளவதுடன், வணிகம் வளர்க்கவும், வணிகர்களை காக்கவும் முழு ஒத்துழைப்பு வழங்கி ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.
ஈரோடு இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் லாரன்ஸ் ரமேஷ், நாமக்கல் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பத்மநாபன், நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்