Close
டிசம்பர் 23, 2024 7:50 மணி

மணிப்பூரில் எல்லை மீறிய எலன் மஸ்க்?

அமெரிக்கத் தொழில் அதிபர் எலோன் மஸ்க்

மணிப்பூர் தொடர்ந்து பற்றி எரியும் ஒரு மாநிலமாக இருப்பது அனைவருக்கும் தெரியும். அதற்கான பிரச்சினைக்கு முக்கிய காரணம் மைத்தி, குக்கி பழங்குடியினர்களுக்கு இடையேயான பிரச்சினை.

இதில் குக்கிகள் பர்மாவில் இருந்து புலம்பெயர்ந்து அந்த பகுதியின் மலைப்பிரதேசங்களை பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க ஆதரவு சர்ச்சுகள் மூலம் ஆக்கிரமித்தவர்கள். மைத்திகள் பூர்வகுடி பழங்குடியினர். முன்பு இந்த குக்கிகளுக்கும், நாகாக்களுக்கு இடையே தான் நீண்ட நாளாக பிரச்சினை இருந்தது. அது இன்று குக்கி-மைத்தி என்று மாறியுள்ளது.

ஏனென்றால், 54% கொண்ட மைத்திகள் சமதள பகுதிகளில் வாழும் பூர்வ குடி பழங்குடியினர்.  ஆனால் அவர்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து இல்லை.  அங்கே  20% சமவெளியும் 80% மலைபகுதியும் உண்டு. அந்த மலை பகுதியில் வாழும் உரிமை, நிலம் வாங்கும் உரிமை மைத்திகளுக்கு இல்லை.

அதாவது ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டிய கதை தான். இது மேற்கத்திய நாடுகளின் அழுத்தத்தால் மைத்திக்களுக்கு காங்கிரஸ் செய்த அநீதி.

அதனால் அவர்கள் நீண்ட நாளாக பழங்குடியினர் அந்தஸ்து கேட்டு சட்ட ரீதியாக போராடி வருகிறார்கள். அதில் நீதிமன்றம் மைத்திகளும் பழங்குடியினர் என்று தீர்ப்பு வழங்கியது. வெறும் 14% வாழும் குக்கிகள் மைத்திக்கள் மீது தாக்குதலை செய்கிறார்கள்.

இவர்களுக்கு, பர்மா எல்லையில் இருக்கும் ஒரு கிறிஸ்தவ அமைப்பு மூலம் அமெரிக்கா, சீனா என இந்தியாவை எதிர்க்கும் எல்லா நாடுகளும் ஆயுதங்களை கொடுக்கிறது. அவர்களுக்கு முக்கிய வருமானம் போதைப்பொருள் உற்பத்தி மூலம் கிடைக்கிறது.

உலகில் சில மிக முக்கிய போதைப்பொருள் உற்பத்தியில் Drug Triangle என்று பர்மா, லாவோஸ், தாய்லாந்துக்கு இடையேயான அதன் தொடர்ச்சியால் இங்கே நடக்கும் போதைப்பொருள் உற்பத்தி மிக முக்கியமானது. அதன் மூலம் ஏராளமான வருமானம்.

அதன் மூலம் நவீன ஆயுதங்களை வாங்குகிறார்கள். சமீபத்தில் அவர்களுக்கு பாதுகாப்பு கவச உடைகளை அமெரிக்கா வழங்கி இருப்பதாக வரும் செய்திகளில், டீஃப் ஸ்டேட் ஆஃப் அமெரிக்காவின் பங்கு பெரிதானது.

அதற்கு காரணம், இந்த 6 வடகிழக்கு மாநிலங்களை கிறிஸ்தவ மதமாற்றம் மூலம் ஒரு கிறிஸ்தவ நாடாக அறிவிப்பது. அதில் இதனுடன் பர்மாவின் ஒரு பகுதி, பங்களாதேஷின் தென்கிழக்கு பகுதி, ஒரு முக்கிய தீவு என்பதன் மூலம், அமெரிக்கா தனது கால்களை பதிக்க செய்து வரும் செயல்.

இந்த சூழலில் சமீபத்தில் ஒரு உளவு தகவலின் பெயரில் ஒரு இடத்தை இந்திய பாதுகாப்புத்துறை தேடுதல் வேட்டையில் ஆயுதங்களை கைப்பற்றியது. அது சாதாரண விஷயம் தான். ஆனால் அங்கே எலன் மஸ்கின் ஸ்டார் லிங்க் தொலை தொடர்பு சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டது தான் இந்தியாவிற்கு கடும் அதிர்ச்சியை தந்துள்ளது.

காரணம், ஸ்டார் லிங் என்பது சேட்டிலைட் தொலை தொடர்பு சாதனம். அது நேரடியாக சேட்டிலைட் மூலம் இயக்கப்படுவதால், அதற்கு எல்லைகள் என்று எதுவும் இல்லை. ஆனால் இந்தியா அதற்கு அனுமதி கொடுக்காததால் அந்த சேட்டிலைட்கள் இந்தியா மீது பறக்கும்போது ஆஃப் செய்திருக்க வேண்டும். அது நமக்கு மட்டுமல்ல, பர்மாவிற்கும் பொருந்தும்.

அப்படியிருக்க இந்த தொலை தொடர்வு சாதனங்களை எப்படி பயன்படுத்தியிருக்க முடியும் என்றால், எலன் மஸ்கின் நிறுவனம் அனுமதிக்கிறது என்பது அர்த்தம். இந்த சேட்டிலைட் தொலை தொடர்பு சாதனங்களுக்கு எல்லையெல்லாம் எதுவும் இல்லை என்பதால், ஒருவர் அமெரிக்காவில் வாங்கி அதை எங்கே வேண்டுமென்றாலும் கொண்டு சென்று பயன்படுத்த முடியும்.

இது இப்போது மட்டுமல்ல, இதற்கு முன்பு ரூ. 35,000 கோடி மதிப்பிலான போதைப்பொருளுடன் ஒரு கப்பல் அந்தமான் பகுதியில் கைப்பற்றப்பட்டது. அதிலும் இது இருந்தது. ஆனால் அவை போகும் வழியில் பயன்படுத்தலாம் என்று நினைக்க ஒரு வாய்ப்புண்டு. ஆனால் இப்போது அது இங்கேயும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதும், உக்ரைன் போரில் அங்கேயும் பயன்படுத்துகிறார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.

அப்படியென்றால் தொலைத்தொடர்பு என்பது ஒரு நாட்டின் கட்டுப்பாட்டிற்கு கட்டுபட்ட இறையாண்மைக்கானது. அது சேட்டிலைட் தொலை தொடர்பால், அதற்கு அப்பாற்பட்டதாக போய்விடும்.

ஏனென்றால் ஒரு விஷயத்தில் தேடுதல் செய்யும்போது, இன்று அவர்களை பிடிக்க மிக முக்கியமானதாக இருப்பது இந்த தொலைத்தொடர்பு சாதனம். அதற்கு அந்த நிறுவனங்களிடம் போலீஸ், மற்றும் பாதுகாப்பு இயக்கத்தினர் தகவல்களை கோரினால் கொடுக்க வேண்டும்.

ஆனால் அது அமெரிக்காவில் இருந்தால், அதுவும் அவர்கள் நாடு இந்த குக்கிகளுக்கு உதவி வரும் நிலையில் தகவல்களை தருவார்களா?

அதுமட்டும்மல், இந்தியாவில் கறுப்பு சந்தை மூலம் வாங்கி அதை நேரடியாக பயன்படுத்த ஆரம்பித்தால், நமது நாட்டின் பாதுகாப்பு கேள்விக் குறியாகி விடுமல்லவா? அது மட்டுமல்ல, அதை அனுமதிக்கக்கோரி எலன் மஸ்க் இந்தியாவை நிர்பந்திக்கிறார். அதை இந்திய அரசு ஏற்கவில்லை.

இப்போது, ட்ரம்ப் வெற்றியில்  எலன் மஸ்க் ஒரு முக்கிய காரணம் என்பதால் அதற்கான அழுத்தங்கள் அதிகரிக்கும். அது மட்டுமல்ல, இந்தியாவின் கார் சந்தை மிகப்பெரியது என்பதால், டெஸ்லா காரை இறக்குமதி செய்ய அனுமதிக்க கோரி வருகிறார். அப்படி செய்தால் இந்தியாவின் வேலை வாய்ப்புகள் பெருமளவில் பாதிக்கும் என்பதால் அதை இந்தியா தடுக்கிறது.

ஆனால் இந்தியா, இங்கே உற்பத்தி செய்வதாக இருந்தால் அனுமதிக்கிறோம் என்று சொல்வதால் அதை செய்ய முடியவில்லை.

இப்போது அந்த டெஸ்லா கார், இந்த ஸ்டார் லிங் இந்தியாவில் அனுமதிக்கக்கோரி அழுத்தங்கள் அதிகரிக்கும்.

அதில் பாதுகாப்பு மட்டுமல்ல, இன்று நம் செல்போன்களுக்கு 18% வரிபோடும் அரசின் வருமானமும் பெருமளவில் பாதிக்கப்படலாம். ஏனென்றால் உலகில் ஒரு நாட்டில் பதிவு செய்து விட்டு எங்கே வேண்டுமென்றாலும் பயன்படுத்த முடியுமே?

ஒருவேளை, எலன் மஸ்க் எல்லை மீறி அதை பயன்படுத்த அனுமதித்தால் என்னவாகும்? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா சேட்டிலைட்டிலிருந்து இன்னொரு சேட்டிலைட்டை தாக்கி அழிக்கும் ஒரு ஒத்திகையை முதன் முதலாக செய்தது.

அந்த வசதிகள் மற்ற நாடுகளிடமும் இருக்கிறது. ஆனால் அதை ரகசியமாக வைத்திருந்த வேளையில், அதை இந்தியா ஓப்பனாக செய்தது. அதை சமீபத்தில் ரஷ்யாவும் மீண்டும் பல சாட்டிலைட்களை அழிப்பதை விண்வெளியில் செய்து காட்டியது.

அதாவது எல்லை மீறினால் அவை பஸ்பமாகிவிடும் என்பது தான் அதன் மூலம் கொடுக்கும் எச்சரிக்கை. அப்படி ஒருவருக்கொருவர் தாக்கி தொலைத்தொடர்பு சாதனங்களை அழித்துக்கொண்டால், நாம் மீண்டும் கடிதம் எழுத வேண்டி வரலாம்.

அதுவும் இன்று நமது தபால் துறையும் சாட்டிலைட் கம்யூனிகேஷனை பயன்படுத்துவதால், புறாவிடு தூதுதான் சாத்தியம் என்றாகிவிடுமோ?

இதுபோன்ற சூழலில், அமெரிக்காவை ஒரு சேர சமாளிக்க முடியாது என்பதால் BRICS மூலம், NATO போல ஒரு அமைப்பாக செய்கிறார்கள்.

எனவே எலன்மஸ்க் எல்லாவற்றையும் செய்ய முடியாது என்றாலும், இதுபோன்ற விஷயங்களை இலைமறைவு காய் மறைவால செய்வார்கள்.

அதாவது அருகில் பங்களாதேஷில் அதை அனுமதிக்கும்போது, அதை இந்தியாவிலும் பயன்படுத்த முடியும் என்பதாலும், இதை காடு மலை, கடல்கள் என்று எங்கும் பயன்படுத்தலாம் என்பதால் வருங்காலம், ஒரு பெரிய பிரச்சினையை சந்திக்கபோகிறது.

ஒரு பக்கம் நாடுகளின் எல்லைகள் பலவீனமாகிறது என்பதும், மறுபக்கம் பிரச்சினைகள் சிக்கலாகிறது என்பதும் புரியும். எலன் மஸ்கின் அழுத்தங்களை மோடியின் எப்படி கையாளப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top