Close
டிசம்பர் 22, 2024 5:44 மணி

நாமக்கல் உழவர்சந்தைக்கு விவசாயிகள் வருகையை அதிகரிக்க எருமப்பட்டி பகுதியில் விழிப்புணர்வு

நாமக்கல் உழவர் சந்தைக்கு விவசாயிகளின் வருகையை அதிகரிப்பதற்காக, எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

நாமக்கல் உழவர் சந்தைக்கு காய்கறி விற்பனைக்கு கொண்டுவரும் விவசாயிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக எருமப்பட்டி பகுதயில், விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

நாமக்கல் கோட்டை ரோட்டில், உழவர் சந்தை அமைந்துள்ளது. இங்கு நாமக்கல், மோகனூர், பரமத்தி, எருமப்பட்டி, சேந்தமங்கலம், கொல்லிமலை, புதுச்சத்திரம் ஆகிய ஒன்றியங்களில் சாகுபடி செய்யப்படும் காய்கறிகள், பழங்கள், கீரை வகைகளை, விவசாயிகள் அறுவடை செய்து, தினசரி கொண்டு வந்து நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர்.

தினமும், சாராசரியாக, 22 முதல் 25 டன்கள், சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில், 30 முதல் 35 டன்கள் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக, உழவர் சந்தை நிர்வாகத்தின் மூலம் 1,568 விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், உழவர்சந்தைக்கு மேலும், காய்கறி, பழங்கள் அதிக அளவில் கொண்டுவரும் வகையில், விவசாயிகளின் வருகையை அதிகரிக்க, ஒவ்வொரு ஒன்றியத்திலும், விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுகிறது.

அதன்படி, எருமப்பட்டி ஒன்றியம், கோணாங்கிப்பட்டி கிராமத்தில், வேளாண் துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) நாசர் அறிவுறுத்தலின்படி, நடந்த விழிப்புணர்வு முகாமிற்கு, உழவர் சந்தை நிர்வாக அலுவலர் சேகர் தலைமை வகித்தார்.

உழவர் சந்தையில் மொத்த விலை, சில்லரை விலை நிர்ணயம் செய்யும் முறை, சந்தையின் நடைமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கி கூறப்பட்டது.

தோட்டக்கலை உதவி இயக்குனர் கோபி, உழவர் சந்தை உதவி நிர்வாக அலுவலர் கோகுல் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top