நாமக்கல்:
மாநில அளவிலான தமிழ் இலக்கியத் திறனறவு போட்டியில், நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவி முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
தமிழக அரசால் கடந்த அக்டோபர் மாநில அளவிலான தமிழ்மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு நடைபெற்றது. இதில் மாநில அளவில் பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.
நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி மாணவ சாருப்ரீத்திமோ இந்த தேர்வில் கலந்துகொண்டு 100க்கு 96 மதிப்பெண் பெற்றார். இவர் மாநில அளவில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்று, தமிழக அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தேர்வு பெற்றுள்ளார்.
மாநில அளவிலான தமிழ் திறனறவு தேர்வில் சாதனை படைத்த மாணவி சாருப்ரீத்தமோவை, குறிஞ்சி கல்வி நிறுவனங்களின் தாளாளர் தங்கவேல், இயக்குனர்கள், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.