Close
டிசம்பர் 23, 2024 3:52 காலை

பனாமா கால்வாயை எடுத்துக் கொள்வோம்: டிரம்ப் மிரட்டல்

டொனால்டு டிரம்ப்

பனாமா கால்வாய் வழியாகச் செல்லும் அமெரிக்க கப்பல்களுக்கு அதிக வரி விதிக்கப்படுகிறது. இதனை நிறுத்தாவிட்டால், அதனை அமெரிக்காவே எடுத்துக் கொள்ளும் என டிரம்ப் கூறியுள்ளார்.
அட்லாண்டிக் கடலையும், பசிபிக் கடலையும் இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட பனாமா கால்வாயை கடந்த 1914 ல் அமெரிக்கா வடிவமைத்தது. பிறகு, 1999 டிசம்பர் 31 அன்று பனாமா நாட்டிடம் ஒப்படைத்தது.
இந்நிலையில், அமெரிக்கா அதிபராக பதவியேற்க உள்ள டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அமெரிக்காவின் பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு முக்கிய பங்கு வகிக்கும் பனாமா கால்வாய், எங்கள் நாட்டின் தேசியச் சொத்து. அமெரிக்காவின் வர்த்தகம், கடற்படை விரைவாக செல்லுவதற்கும், அமெரிக்க துறைமுகங்களுக்கு பொருட்களை விரைவாக கொண்டு செல்வதற்கும் இக்கால்வாயின் பங்கு மிகவும் முக்கியமானது.
இக்கால்வாயை அதிகம் பயன்படுத்தும் நாடு அமெரிக்கா. நவீன உலகின் அதிசயங்களில் ஒன்றான இக்கால்வாய் 110 ஆண்டுகளுக்கு முன்பு கட்டமைக்கப்பட்டது. இதற்காக அமெரிக்கர்களின் பணம் அதிகளவு செலவு செய்யப்பட்டது. கட்டுமானத்தின் போது ஏற்பட்ட பலவித பிரச்னைகள் காரணமாக 38 ஆயிரம் அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஆனால் அமெரிக்க கப்பல்கள் மற்றும் கடற்படைக்கு பனாமா வசூலிக்கும் வரி அதிகமானது. இதற்கான விதிமுறைகள் பின்பற்றப்படாவிட்டால் அக்கால்வாயை திரும்ப கேட்போம். எவ்வித கேள்வியும் இன்றி எங்களிடம் திருப்பித் தரப்பட வேண்டும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top