கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 50% மானியத்தில் விவசாயிகளுக்கு விசைத்தெளிப்பான் வழங்கப்படுகிறது என மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் தகவல் தெரிவித்தார்.
மதுக்கூர் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கருப்பூர்,புலவஞ்சி, ஒலயகுன்னம், வேப்பங்குளம், வாட்டாகுடி, உக்கடை மற்றும் சிரமேல்குடி பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் விவசாயிகளுக்கு 50 சத மானியத்தில் 16 லிட்டர் விசைத்தெளிப்பான்கள் வேளாண் உதவி அலுவலர்களின் பரிந்துரையின்படி வழங்கப்பட்டு வருகிறது.
விசைத்தெளிப்பான் தேவைப்படும் விவசாயிகள் உடனடியாக தங்கள் வேளாண் உதவி அலுவலர்களை அணுகி ஆதார் மற்றும் நில உரிமை ஆவண நகல்களை வழங்கி மதுக்கூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
மதுக்கூர் வேளாண் விரிவாக்க மையத்தில் பணமில்லாப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நோக்கத்தில் விற்பனை முனைய கருவி மூலம் விற்பனை மேற்கொள்ளப்படுவதால் விவசாயிகள் வரும்பொழுது ஆன்லைன் மூலம் தொகை செலுத்தி பயன்பெற மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் கேட்டுக்கொண்டார்.
வாட்டாகுடி உக்கடை பஞ்சாயத்தில் ஆறு விவசாயிகளுக்கு 50 சத மானியத்தில் வாட்டாகுடிஉக்கடை ஊராட்சி மன்ற தலைவர், வேளாண் உதவி இயக்குனர், வேளாண்மை உதவி அலுவலர் ஜெரால்டு ஆகியோர் வழங்கினர்.
33 தெளிப்பான்கள் பொது இனத்திலும் 8 தெளிப்பான்கள் எஸ்சிபி இனத்திலும் வழங்கப்பட்டு வருவதால் விவசாயிகள் உடன் முன்னுரிமை அடிப்படையில் பெற்று பயன்பெற மதுக்கூர் வேளாண்மை இயக்குனர் கேட்டுக் கொண்டார்.