Close
டிசம்பர் 25, 2024 8:08 மணி

பாலின பாகுபாடு மற்றும் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் தேசிய அளவிலான பாலின பாகுபாடு மற்றும் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகளுக்கு, ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா்.

கோலங்கள், விளையாட்டுகள், கையொப்ப இயக்கம், சுய புகைப்படம், வாகன பேரணி, மனிதச் சங்கிலி, விழிப்புணா்வு பேரணி, ஒட்டு வில்லைகளை ஒட்டுதல், கூட்டரங்கம் என 15 வகையான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இரு சக்கர வாகனப் பேரணியை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

விழிப்புணா்வு கையொப்ப இயக்க நிகழ்ச்சியில் ஆட்சியா் பங்கேற்று, கையொப்பமிட்டாா். சுய புகைப்படம் எடுத்துக் கொண்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன், விழிப்புணா்வு விளையாட்டுப் போட்டிகளையும் தொடங்கி வைத்தாா்.

மேலும் குடும்ப வன்கொடுமை, பெண்களின் பெயரில் சொத்துக்களை பதிவு செய்வதை ஊக்குவித்தல், மற்றும் பேட் டச் ,ஆண் குழந்தைகளும் பெண் குழந்தைகளும் சமமாக வளர்த்தல், ஒன்றிணைவோம் குரல் கொடுப்போம், வன்முறைக்கு எதிராக பெண் குழந்தைகளை பாதுகாப்போம், அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்கேற்பு ,மகளிர் மதியுங்கள் ,குழந்தை திருமண தடுப்பு, பெண் கல்வி கற்றல், ஆணும் பெண்ணும் சமம் ,அனைவரும் சமம் , பெண் கல்வி கற்றல் ,பெண்கள் உயர்கல்வி கற்பதை ஊக்குவிப்போம் உள்ளிட்ட கருப்பொருளில் 18 வட்டாரங்களில் இருந்து மகளிர் குழுக்கள் மூலம் வரையப்பட்ட விழிப்புணர்வு கோலத்தினை ஆட்சியர் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் 4000 மகளிர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் ராம் பிரதீபன், திட்ட இயக்குனர் மகளிர் திட்டம் சரண்யா தேவி,தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மேலாளா்கள், ஒருங்கிணைப்பாளா்கள், சமுதாய அமைப்பாளா்கள், மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள், வட்டார வள பயிற்றுநா்கள், சமுதாய வள நபா்கள் மற்றும் அரசுத் துறை சாா்ந்த அலுவலா்கள் உள்பட ஏராளமான மகளிா் கலந்து கொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top